பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/735

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

neuro-psychic

neurotensin


மருத்துவத்தையும் இணைத்து நோய்களுக்கு மருத்துவம் செய்தல்.

neuro-psychic : நரம்பு-உளவியல் சார்ந்த : நரம்பியல், உளவியல் இரண்டும் சார்ந்த பண்புகள்.

neuroradiology : நரம்பு ஊடு கதிரியல் : நரம்பு மண்டலம் தொடர்பான ஊடுகதிரியல்.

neurorrhaphy : நரம்புத் தையல்; நரம்புத் தைப்பு : அறுந்துபோன நரம்பின் இரு முனைகளையும் தையலிட்டு இணைத்தல்.

neurosarcoma : நரம்புத் தசைக் கட்டி : நரம்பு, இணைப்பு மற்றும் தசைத் திசுக்கள் அடங்கிய ஒரு உக்கிரமான கட்டி.

neuroscience : நரம்பு அறிவியல் : நரம்பியல், அது தொடர்பான நரம்பு உட்கூறியல், நரம்பு உடலியல், நரம்பு மருந்தியல், நரம்பு அறுவை மருத்துவம் போன்ற பொருட்பாடுகள் பற்றிய ஆய்ந்தறியும் அறிவியல்.

neurosecretion : நரம்பணுச் சுரப்பு : நரம்பணுவால் முனை யத்திலிருந்து வெளிப்படும் ஒரு வேதியியல் பொருள்.

neurosecretory granule : நரம்பு சுரப்புக் குருணை : ஒர் அடர்த்தியான மையக் கருவுடைய குருணை. இது சிறு சவ்வுப்பை, இதனைச் சுற்றி தெளிவான இடைப்பரப்புசூழ்ந்திருக்கியிருக்கும் அதையும் கற்றி ஒரு மெல்லிய விளிம்பு இருக்கும். இவற்றில் கால்சிட்டோனின், காஸ்டிரின், குளுக்காகோன் போன்ற பல்வேறு இயக்கு நீர்கள் அடங்கியிருக்கும்.

neurosis : மூளைக் கோளாறு: மனக்கோளாறு; நரம்பியம்; நரம்புத் தளர்ச்சி : நரம்புச் சிக்கலால் உண்டாகும் உள நிலைக்கோளாறு, மூளை நுண்ம அமைதிக்கோளாறு, இது நோயாளியின் சுற்றுச்சூழலில் ஏற்படும் அதிர்ச்சிகள், கவலைகள் காரணமாக உண்டாகிறது. இது பைத்திய நிலையிலிருந்து வேறுபட்டது.

neurosurgeon : நரம்பு அறுவை மருத்துவர் : நரம்பு அறுவைச் சிகிச்சையில் ஒரு வல்லுநர்.

neurosurgery : நரம்பு அறுவை மருத்துவம் : நரம்பு மண்டல அறுவைச் சிகிச்சை.

neuro-syphilis : நரம்புக் கிரந்தி.

neurotic : நரம்பு மருந்து; நரம்பியக்கச் சீரழி : நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் மருந்து நரம்புக் கோளாறுடையவர்.

neurotensin : மூளைச் சுரப்பு நீர் : குருதிநாள விரிவகற்சியைத் தூண்டுகிற ஒரு மூளைச் சுரப்பு நீர். இது, அடிவயிறு சார்ந்த இரைப்பைச் சுரப்பினையும், குடல் அசைவினையும் தடை செய்கிறது.