பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/736

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

neurothekoma

735

neutron


neurothekoma : நரம்பு உறை ஊனிர்ப்புற்று : நரம்பு உறை ஊனீர்ப் புற்று. இது குழந்தைப் பருவத்தில் தோல்-மேல் தோல் இடைவெளியில் உக்கிரமில்லாத கட்டியாக உண்டாகிறது.

neurotic : நரம்புக் கோளாறு உடையவர்.

neurotomy : நரம்பறுவை; நரம்பு வெட்டு : ஒரு சிரை உணர்விழப் புக்கான நரம்பு அறுவை மருத்துவம்.

neurotonic : நலிந்த நரம்பு மண் டல ஊக்குவிப்பு : பழுதடைந்த நரம்புமண்டலத்தை ஊக்குவித்தல்.

neurotoxic : நரம்பு நஞ்சு; நரம்பு வழி நச்சு : நரம்புத் திசுக்களை அழிக்கக் கூடிய நச்சுப் பொருள்.

neurotoxin : நரம்பு நஞ்ச : நரம்பு தூண்டுதல் கடத்தலைத் தடை செய்கிற உயிரணு நச்சு.

neurotransmitter : நரம்பு தூண்டல் ஊடகம் : மின் தூண்டலைக் கடத்தும் திறனுடைய முன் நரம்புத் தொடர்பு அணுவினால் வெளியிடப்படுகிற ஒரு வேதியியல் ஊடகம்.

neurotripsy : நரம்பு நசிப்பு : ஒரு நரம்பினை அறுவை மருத்துவம் மூலம் நசியச் செய்தல்.

neutropenia : வெள்ளணுக் குறைபாடு : இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைவாக இருத்தல். அதாவது, ஒர் அலகு இரத்தத்தில் 500-க்குக் குறைவான வெள்ளணுக்கள் இருத்தல்.

neutrophil : பலமுனை கரு வெள்ளணு : இரத்தத்தில் பெரு மளவிலுள்ள வெள்ளணுக்கள். இதிலுள்ள துகள்கள், வலுவான சிவப்பூதா நிறச் சாயப் பொருளாகவோ, வலுவான நீல நிறச்சாயப் பொருளாகவோ இருப்பதில்லை.

neurotrophy : நரம்புத் திசுச் சத்து ஊட்டம் : நரம்பு மண்டலத்தின் ஆதிக்கத்திலுள்ள திசுவின் சத்து ஊட்டம்.

neurotropic : நரம்பு உறவுநிலை : நரம்பு மண்டலத்துடனான உறவு நிலை.

neurovascular : இரத்த நாளம் சார்ந்த : இரத்த நாளங்களுக்கு இரத்த மூட்டுகிற நரம்புகள் தொடர்புடைய.

neutral : நடுநிலைப் பொருள்; நடு நிலை : எந்த ஒரு பக்கமும் சார்ந்திராக நிலை. அமிலத்தையோ, காரத்தையோ சாராத நிலையிலுள்ள பொருள்.

neutralisation : மட்டுப்படுத்துதல்; நடுநிலையாக்கம் : செயலற்ற தாக்குதல்; வினைத் திறனைக் குறைத்தல்.

neutron : நியூட்ரான் : மின் இயக்கமில்லாத சிற்றணுத் துகள்கள். இது புரோட்டானுக்கு இணையான பொருண்மையைக் கொண்டு இருக்கும்.