பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/737

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

neutropaenia

736

Nicholas...


neutropaenia : நியூட்ரோபில் அணுக்குறை : குருதியோட்டத்தில் பல முனைக் கரு வெள்ளணுக்கள் எண்ணிக்கையில் அளவுக்கு மீறிக் குறைவாக இருத்தல்.

neutrophilia : கருவெள்ளணுப் பெருக்கம் : குருதியோட்டத்தில் அல்லது உயிரணுக்களில் கரு வெள்ளணுக்கள் அதிகமாக இருத்தல்.

neutrotaxis : கருவெள்ளணுத் தூண்டல் : ஒரு பொருளினால் பல முனைக் கரு வெள்ளணுக்கள் தூண்டப்பெறுதல். இதன் தூண்டுதலால் இவை தன்னை நோக்கி அல்லது தன்னை விட்டு விலகிச் செல்லக்கூடும்.

neutralising antibody : தற்காப்பு மூல நலிவாக்கம் : பாக்டீரியாவுக்கு எதிரான தற்காப்புக்காகத் 'தாய் உயிரினால்' உற்பத்தி செய்யப்படும் தடை காப்புப் புரதங்கள். இவை நுண்ணுயிரியின் பரவும் திறனைக் குறைக்கும் திறனுடையவை.

newborn : பிறந்த குழந்தை.

nexin : நெக்சின் : கண்ணிமை மயிரிலும் கசையிழையிலும் உள்ள நரம்பணுக்களின் இணை பிரியாப் பகுதியாகவுள்ள புரதம்.

nexus : இணைவு : சந்திப்பு இரு உயிரணுக்களுக் கிடையிலான தொடர்பு.

Nezelof's syndrome : நெசலோஃப் நோய் : 'T'-உயிரணு இல்லாதிருத்தல், "B"- உயிரணுக்குறை பாடு, தற்காப்பு மூலங்கள் உற்பத்தியாகாதிருத்தல் போன்ற காரணங்களால் பிறந்த குழந்தைகளிடமும், படிப்படியாகக் கடுமையாக வளரும் நோய்கள். ஃபிரெஞ்சு மருத்துவ அறிஞர் சி.நெசலோஃப் பெயரால் அழைக்கப்படுகிறது.

NGU : சிறுநீர்ப் புறவழி அழற்சி : வெட்டையில்லாத சிறுநீர்ப் புறவழி அழற்சி.

NHs : தேசியச் சுகாதாரப் பணி.

niacin : நியாசின் : நிக்கோனிக் அமிலம். சமநிலை உயிரியல் ஆற்றல் உள்ள நிக்கோட்டினா மைடு, இது வைட்டமின்-B தொகுதியின் ஒரு பகுதி.

niacinamide : நியாசினாமைடு : உயிரியல் முறையில் வீரியமுடைய நிக்கோட்டினிக் அமிலத்தின் ஒரு வடிவமான நிக்கோட்டினாமைடு.

niacytin : நியாசிட்டின் : சோளத்தில் காணப்படும் நியாசினின் ஈர்க்க முடியாத ஒரு வடிவம்.

Nicholas procedure : நிக்கோலஸ் நடைமுறை : முழங்காலில் ஏற்படும் கடுமையான இணைப்பிழைக் காயங்களைக் குணப்படுத்துவதற்கு அறுவைச் சிகிச்சை நடைமுறை.