பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/738

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

niclosamide

737

Niemann-Pick..


niclosamide : நிக்லோசாமைடு : முதிர்ச்சியடைந்த நாடாப்புழுவை வெளியேற்றும் மருந்து. இது ஒரு வேளைக்கு 2 கிராம் அளவுக்குக் கொடுக்கப் படுகிறது. இதை அருந்த பட்டினியிருக்கவோ பேதிக்கழிவு செய் யவோ தேவையில்லை.

nicotinamide : நிக்கோட்டினாமைடு : நிக்கோட்டினிக் அமி லத்திலிருந்து எடுக்கப்படும் வழி பொருள். நிக்கோட்டினி அமிலத்தின் குருதி நாள விரிவகற்சி மருந்தின் வினை தேவையில்லாத போது வைட்டமின் மட்டும் போதும் எனக் கொடுக்கப் படுகிறது.

nicotine : புகையிலை நஞ்சு : நிக்கோட்டின் புகையிலிருந்து வடித்தெடுக்கப்படும் எண்ணெய் வடிவ நச்சுச் சத்து.

nicotinic acid : நிக்கோட்டினிக் அமிலம் : வைட்டமின் B கல வையில் இன்றியமையாத உணவுக் காரணிகளில் ஒன்று. இக் கலவையின் குருதிநாள விரிவகற்சி சினையானது கடுங் குளிரால் ஏற்படும் கன்னிய கை கால் கொப்புளங்களுக்கும் பயனுடையதாகும்.

nictitation : கண் கொட்டுதல்; இமையியக்கம்; இமைச் சிமிட்டல் : கண்ணிமைகளை தன் முயற்சியின் விரைவாக இமைத்தல் உள்ளிமைப்படலம் வேகமாகத் திறந்து மூடியாடப் பெறுதல்.

nictating membrane : உள்ளிமைப் படலம் : பல உயிர்களில் உள்ளிமைப் படலம் முழுமையாக வளர்ந்து மூடிபோல் கண்ணை மூடியிருக்கும்.

NICN : மகப்பேற்றுக்கு பிந்திய தீவிர மருந்துப் பிரிவு.

nidation : கருப்பதிவு : கருப்பைப் படலத்தில் கருவைப் பதிய வைத்தல்.

nidus : உகந்தஇடம்; பதிமையம்; தொற்று மிகைப் பகுதி : ஒரு நோயின் கருமையம் நச்சூட்டு மையம், நோய் தோன்றும் இடம்.

Niemann-Pick disease : நியமான்-பிக் நோய் : கொழுப்பு அழற்சி எனப்படும் குடும்ப நோய். இது பல்வேறு திசுக்களில் ஸ்பிங்கோமைவின் என்ற செரிமானப் பொருள் திரண்டிருத்தல். ஜெர்மன் குழந்தை மருத்துவ அறிஞர் ஆல்பர்ட் நியமான், ஜெர்மன் மருத்துவ அறிஞர் லுட்விக்பிக் ஆகியோர் பெயரால் அழைக்கப்படுகிறது.

Niemann-Pick disease : நியமான்-பிக் நோய் : கொழுப்பு அழற்சி எனப்படும் குடும்ப நோய். இது பல்வேறு திசுக் களில் ஸ்பிங்கோமைவின் என்ற செரிமானப் பொருள். திரண்டி