பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/740

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nit

739

nitrogen


நோய்க்குக் கொடுக்கப்படும் ஒரு மருந்து. இது வேளை மருந்தாகப் பகுக்கப்பட்டு 12 மணி நேர இடைவெளிகளில் கொடுக்கப்படுகிறது. புற நோயாளிகளுக்கும் இதைக் கொடுக்கலாம். இதை உட் கொள்வதால், சிறுநீர் அடர் பழுப்பு நிறத்திலிருக்கும் என்று நோயாளிகளை எச்சரிப்பது நல்லது.

nit : பேன் முட்டை; ஈறு : ஈர் ஒட்டுண்ணி இனவகைகளின் முட்டை.

nitinal : நிட்டினால் : நினைவு உலோகம். நிக்கலும் டைட்டே னியமும் இணைந்த உலோகக் கலவை. இது தனது பண்பியல்புகளை நினைவில் வைத்துக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் ஒரு நிட்டினால் சுருள் தயாரிக்கப்பட்ட பின்னர் அது முறுக்கப்படுகிறது அல்லது அதன் வடிவு நீங்கும் அளவுக்கு நீட்டப்படுகிறது என்றால், அதே வெப்ப நிலைக்கு மீண்டும் சூடாக்கும்போது அது தனது பழைய சுருள் வடிவுக்கு மீண்டும் திரும்பிவிடும். இதனைப் பல்வேறு வகையில் பயன்படுத்தலாம். இதனைக் கொண்டு பற்குழிகளை நிரப்பலாம். வாதநோயைக் குணப்படுத்த ஊன்று பொருளாகப் பயன்படுத்தலாம். இன்றியமையாத் தமனிகளில் வலைச் சட்டங்களாகப் பொருத்தி குருதிக் கட்டுகளைத் தடுக்கலாம். விண்வெளி மற்றும் இராணுவப் பயன்பாடுகளுக்கும் இது ஏற்றது.

nitrazepam : நைட்ராஸ்பாம் : பென்சோடியாஸ்பைன் வகையைச் சேர்ந்த துயிலுரட்டும் மருந்து. இந்த மருந்தை உட் கொள்ளும் சிலருக்கு விரிவான கனவுகள் தோன்றக் கூடும்.

nitro furantoin : நைட்ரோ ஃபூராண்டாய்ன் : கிராம் சாயம் எடுக்காத கிருமிகளால் விளையும் நோய்களின் நுண்மத்தடை மருந்து. சிறுநீர்ப்பை அழற்சியில் பயன்படும்.

nitrofurazone : நைட்ரோஃபூராசோன் : பாக்டீரியா எதிர்ப்பு மருந்து. இது வெப்ப மண்டலப் பயன்பாட்டுக்காகக் களிம்பாகவும் கரைசலாகவும் கிடைக்கிறது.

nitrogen : நைட்ரஜன் (வெடியம்) : வாயு மண்டலத்திலுள்ள வாயு களில் ஐந்தில் நான்கு பகுதியாகவுள்ள வாயுத் தனிமம். இதனை மனிதர் நேரடியாகப் பயன்படுத்த முடியாது. எனினும் மண்ணிலும் பயறு இனச்செடி களின் வேர்களிலும் உள்ள சில உயிரிகள், நைட்ஜனை நிலைப் படுத்தும் திறனுடையவை. இது புரதம் போன்ற பல்வேறு உயிரணுத் துணைப்பொருள் களுக்கும், புரத உணவுகளுக்கும் இன்றியமையாததாகும்.