பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/741

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nitrogen balance

740

Nocardia


nitrogen balance : நைட்ரஜன் சமநிலை : ஒருவர் அன்றாடம் உட்கொள்ளும் புரதத்திலிருந்து கிடைக்கும் நைட்ரஜன் அளவு, அவர் வெளியிடும் நைட்ரஜனுக்குச் சம அளவில் இருக்குமானால் அது நைட்ரஜன் சம நிலை எனப்படும். உட்கொள்ளும் நைட்ரஜன் வெளியேறும் நைட்ரஜனைவிடக் குறைவாக இருப்பின் அது எதிர்மறை நைட்ரஜன் சமநிலையாகும். சிறுநீரிலுள்ள யூரியா, அம்மோனியா, கிரியேட்டினின் ஆகியவை மூலமாக நைட்ரஜன் முக்கியமாக வெளியேறுகிறது. மொத்த நைட்ரஜனில் 10% மலத்தின் வாயிலாக வெளியேறுகிறது.

nitrogen dilution method : நைட்ரஜன் நீர்த்தல் முறை : நிலையான நுரையீரலின் கன அளவுகளை அளவிடும் ஒரு முறை.

nitroglycerin : நைட்ரோ கிளிசரைன் : கிளிசரால் டிரினிட்ரேட் தொண்டை வலியைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய குறுகிய காலம் வினை புரியக்கூடிய குருதி நாள விரிவகற்சி மருந்து.

nitrosamine : நைட்ரோசாமின் : புகையிலையில் காணப்படும் ஒருபுற்றுத் தூண்டுபொருள்.

nitrosurea : நைட்ரோசூரிய : புற்று எதிர்ப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஒரு கார முட்டும் பொருள்.

nitrous oxide : நைட்ரஸ் ஆக்சைடு : இதனைச் சிரிப்பு வாயு என்றும் கூறுவர். வாயு வடிவ மயக்க மருந்தாகப் பயன்படுகிறது. இது நீலநிற நீளுருளைகளில் கிடைக்கிறது.

nivaquine : நிவாக்குவின் : குளோரோக்குவின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Nobecutane : நோபிக்குட்டேன் : கரையக்கூடிய ஒரு செயற்கைப் பிசினின் வணிகப் பெயர். இந்தக் கரைசலைக் காயத்தில் தெளித்தால், அது ஒளி ஊருவக் கூடிய தீப்பற்றாத நெகிழ்வுப் படலமாக மாறுகிறது. இது காற்றும் நீராவியும் உட்புக அனுமதிக்கிறது. ஆனால், பாக்டீரியா உட்புக வழிவிடாது.

Noble's plication : நோபின் தோல் மடிப்பு : உதரஉறை இணைப்பு களை விடுவிக்கவும், மீண்டும் இணைப்புகள் ஏற்படும்போது தடை எதுவும் ஏற்படாமல் இருக்கும் வகையில் நெளவரியாகத் தையலிடுவதற்குமான செயற்பாட்டு நடைமுறை.

Nocardia : நோக்கார்டியா : ஆக்சிஜன் உள்ள இயங்கும் தன்மை இல்லாத கதிர்வீச்சுப் பாக்டீரியாக்களில் ஒருவகை. இவற்றில் விண்மீன் வடிவ நோக்கார்டியா,