பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/742

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nocardiosis

741

non-cirrhotic..


பித்தளை நிறமுடைய நோக்கார்டியா என்பவை நோய் உண்டாக்கக் கூடியவை. ஃபிரெஞ்சு கால்நடை நோயியலறிஞர் எட்மண்ட்-நோக்கார்ட் பெயரால் அழைக்கப்படுகிறது.

nocardiosis : நோக்கார்டியா நோய் : நுரையீரல்கள், நரம்பு மண்டலம் தொடர்புடைய நோக்கார்டியா பாக்டீரியாவினால் உண்டாகும் ஒரு நோய்.

nociceptive : வலியூக்கி : வலியை அதிகமாக்கும் அல்லது பரப்பும் திறனுடைய.

nocturia : இரவில் சிறுநீர் கழிதல்.

nocturnal : இரா.

node : முண்டு; கணு.

nodule : நரம்புக் கரணை; கழலை நுண் கணு : நரம்புக் கரணை.

Noguchia : நோகுச்சியா : இமை இணைப்படலத்தில் காணப்படும் கிராம்-எதிர்படி கசையிழையுடைய நுண் கம்பிகள். ஜப்பானிய பாக்டீரியாவியலறிஞர் ஹிடேயோ நோகுச்சியா பெயரால் அழைக்கப் படுகிறது.

Noludar : நாலுடர் : மெத்திப் பிரிலோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

noma : திசு அரிப்பு நோய் : தசையழுகல் அழற்சி வாயழுகல் நோய். வாய்-முகத்திசுக்களில் ஏற்படும் கடுமையான தசையழுகல் பல நுண்ணுயிரியல் மற்றும் அழற்சிப் புண்ணுடைய நோய். இது ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளிடம் காணப்படுகிறது. இந்நோய் ஆழமான திசுக்களை மிகவேககமாக அரித்து, எலும்புளும் பற்களும் வெளியே தெரியும்படி செய்கிறது.

nomenclature : பெயர்த்தொகுதி : அறிவியல் எதிலும் பயன்படுத் தப்படும் பெயர்களின் ஒரு தொகுதி முறை.

Nomina Anatomia : மருத்துவப் பெயர்க் களஞ்சியம் : உட்கூறியல் பற்றிய மருத்துவப் பெயர்களின் சொற்களஞ்சிய ஏடு. இதனை பன்னாட்டு உடல் உட்கூறியல் பேரவை தயாரித்து உள்ளது.

nominal aphasia : பெயர் மறதி : பொருள்களின் பெயர்களைக் குறித்துரைப்பத்ற்குத் திறன் இன்மை.

nomogram : நோமோகிராம் : அறியப்படாத நிலையளவுருக்களின் மதிப்பினை வரைபட முறையில் கணிக்கும் வகையில் வகைசெய்யப்பட்ட அளவித் திட்டங்களின் ஒரு வரிசை.

non-cirrhotic portal fibrosis : இறுக்கமற்ற கல்லீரல் நார்த்திசு அழற்சி : இறுக்கமற்ற உள்ஈரல்