பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

adipectomy

74

adiposis


adipectomy : கொழுப்புடைக் கட்டி.

adipocele : கொழுப்புப் பிதுக்கம்.

adipocere : அழுகல் விழுது : நீரில் அழுகிய பிணத்தின் மீது உண்டாகும் கொழுப்புப் பொருள்.

adiaphoria : அடியாபோரியா : பல தொடர்ச்சியானப் புறத்துண்டல் களுக்கும் பலனில்லாமை.

adipocoele : கொழுப்புப் புதுக்கம்; கொழுப்பினிப்பிதுக்கம் : கொழுப்புத் திசு உடலின் உள் உறுப்புலிருந்து பிதுங்கி வெளி வருதல்.

adipocellular : கொழுப்பினத்திசு அணு சார்ந்த : கொழுப்புத் திசுக் களுக்கும் உயிரணுத் திசுக்களுக்கும் தொடர்புடைய.

adipocyte : கொழுப்புடைத்திசு.

adipogenesis : கொழுப்புடையாக்கம்.

adipogenic : கொழுப்பு ஊக்கி; கொழுப்பு ஆக்க ஊக்கி : கொழுப்பு உருவாக ஊக்கியாயமையும் பொருள்.

adipohepatic : ஈரல் கொழுப்பேற்றம்.

adipokinesis : கொழுப்புத்திசுக்கள் உடலில் நகருதல்.

adipokinin : அடிப்போகைனின் : மூளை அடிச்சுரப்பிகள் முன் மடலில் சுரக்கின்ற இயக்குநீர். இது கொழுப்புத் திசுக்களிலிருந்து கொழுப்பணுக்களை உடலின் பல பகுதிகளுக்கு எடுத்துக் கொள்ள உதவுகிறது.

adipolysis : கொழுப்புச் சிதைப்பு.

adipoma : கொழுப்புடைக் கட்டி.

adipometer : தோல் ஆழ அளவி.

adiponecrosis : கொழுப்பு மரிப்பு; கொழுப்பு மடிதல்; கொழுப்பு இறத்தல்: உடலில் கொழுப்பணுக்கள் அல்லது கொழுப்புத் திசுக்கள் அழியும் நிலை.

adipopexis : கொழுப்பினி ஏற்றம் : உடலில் கொழுப்பு சேமிக்கப் படுதல்.

adiposed : கொழுப்புடைய; கொழுப்பார்ந்த.

adipose : கொழுத்த; உயிரினக் கொழுப்பு; கொழுப்பார்ந்த; கொழுப்பேறிய : கொழுப்புக்குரிய; கொழுத்த. உயிரினக் கொழுப்புத் திக அடங்கிய உயிரணுக்களில் வெள்ளை அல்லது பழுப்பு நிறக் கொழுப்பு அடங்யுள்ளது.

adipose tissue : கொழுப்புத் திசு.

adiposis : கொழுப்பு ஏற்றம்; கொழுப்பு மிகு; கொழுப்பு மிகைப்பு; கொழுப்புத் திசு மிகைவு : உடலில் அளவுக்கு அதிகமாகக் கொழுப்பு சேருதல்.