பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/750

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nuclear magnetic..

749

nucleoside


நேரடி மரபணுச் சந்ததிகள் அடங்கிய கருமையக் குடும்ப அலகு.

nuclear magnetic reasonance (NMR) : அணுக் காந்த ஒலியலை அதிர்வு : காந்த ஒலியலை அதிர்வு உருக்காட்சியாக்கம்.

nuclear medicine : அணுவியல் மருத்துவம் : ஊடுகதிர் ஓரகத் தனிமங்களை நோய்களைக் கண்டறியவும், நோய்க் சிகிச்சைக்கும் பயன்படுதுகிற மருத்துவத் துறை.

nuckar roundness factor : கரு மைய வட்டக் காரணி : குறுக்கு வெட்டில்முழுமையான வட்டத்தைக் காட்டும் கரு மையத்தின் அளவு. அணுவியல் ஒழுங்கீனம் அதிகரிக்கும்போது உண்டாகும் உக்கிரமானநிலைமை.

nuclease : நியூக்ளியேஸ் : நியூக்ளிக் அமிலங்களை நீரால் பகுப்பதை ஊக்குவிக்கும் ஒரு செரிமானப் பொருள்.இதில் டிஎன்எஸ், ஆர்.என்.எஸ் என்ற செரிமானப் பொருள்கள் அடங்கியிருக்கின்றன.

nucleated : உட்கருவுடைய : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உட்கருவைக் கொண்டுள்ள.

nucleic : நியூக்ளிக் மீச்சேர்மம் : பென்டோஸ் (சர்க்கரை) பாஸ் போரிக் அமிலம், பூரின், பைரா மிடைன் (நைட்ரச அமிலங் கள்) ஆகியவை அடங்கிய சிக்கலான வேதியியல் கட்டமைப்பைக் கொண்டுள்ள நியூக்ளியோட்டைடு, டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ இன் அமிலமீச்சேர்மம்.

nucleolar : நியூக்ளியோலார் : நியூக்ளியோலஸ் தொடர்புடைய.

nucleolus : நியூக்ளியோலஸ் : உயிரணுவின் கருமையத்தினுள் இருக்கும் ஒரு சிறிய வட்டத் திரட்சி. இது நியூக்ளியோ புரத உற்பத்தியுடன் தொடர்புடையது.

nucleoproteins : அணுக்கருப் புரதங்கள் : உயிரணுக்களின் உட்கருவில் காணப்படும் புரதங்கள். இதில் உட்கரு அமிலத்துடன் இணைந்த ஒரு புரதம் இருக்கும். இது சிரனைத்தின் போது உடைந்து வளர்சிதை மாற்றம் பெற்று யூரிக் அமிலம் சிறுநீர் வழியாக வெளியேறும்.

nucleorrhexis : உயிரணுக் கூறுபாடு : உயிரணுக் கருமையம் பிரிவுறுதல்.

nucleosidase : நியூக்ளியோசிடேஸ் : நியூக்ளியோட்டைடுகளை பூரின் அல்லது பைரிமிடின் மூலங்களாக நீரால் பகுப்பதை ஊக்குவிக்கும் ஒரு செரிமானப் பொருள்.

nucleoside : நியூக்கிளியோசைடு : பூரின் அல்லது பைரிமிடின் மூலம் உடைய சர்க்கரையின் (ரிபோஸ் அல்லது டியாக்சிரி போஸ்) ஒரு கூட்டுப்பொருள்.