பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/751

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nucleosome

750

nulliparity


nucleosome : நியூக்ளியோசோம் : இனக்கீற்றுகளுடன் தொடர்பு உடைய தீவிர ஆதாரப் புரதங்களின் ஒரு திரட்சி.

nucleotidase : நியூக்ளியோட்டிடேஸ் : நியூக்ளியோட்டைடுகளை பாஸ்போரிக் அமிலமாகவும், நியூக்கியோசைடுகளாகவும் நீரால் பகுப்பதை ஊக்குவிக்கும் ஒரு செரிமானப் பொருள்.

nucleotide : நியூக்ளியோட்டைடு : டி.என்.ஏ. ஆர்.என்.ஏ என்ற நியூக்ளிக் அமிலங்களின் அடிப்படை அலகு. இவை பூரின் அல்லது பைரிமிடின் மூலம் (ஏ-அடினைன், டி-தைமின், யூ-யூராசில், ஜி-குவானைன் அல்லது சைட்டோசைன்), பென்டோஸ் சர்க்கரை (ரிபோஸ் அல்லது டியாச்சிரிபோஸ்) ஒரு பாஸ்பேட் குழுமம் ஆகியவற்றினால் உருவானவை.

nucleotoxic : உட்கரு நச்சு : உயிரணு உட்கருவிலுள்ள நச்சுத் தன்மை. இது வேதியியல் பொருள்களையும், நோய்க் கிருமிகளையும் குறிக்கும்.

nucleus : உட்கரு; அணுக்கரு : உயிரணுவின் உட்பகுதி. இதில் நிறக்கோல்கள் (குரோமோ சோம்) மரபணுக்கள் அடங்கி இருக்கும்.

nuclide : நியூக்ளைடு : அணுவின் ஒருவகை. இது அதன் கருமை யத்தின் அமைப்பின் பண்பினை உடையது. புரோட்டான்கள், நியூட்ரான்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை இந்தப் பண்பினை நிருணயிக்கிறது.

null cell : பயனிலா உயிரணு : எலும்பு மச்சையில் உருவாகும் ஒரு நிணநீர் வெள்ளைக் குருதி அணு. இதில், 'டி' மற்றும் 'பி' வெள்ளைக் குருதி அணுக்களின் பண்புகள் இராது. இவை இது இயற்கைக் கொல்லி அல்லது என்கே உயிரணுக்கள் எனப்படும்.

nullipara : மலடி; ஈனாத்தாய்; பேற்றிலி : குழந்தை பெறாத ஒரு பெண்.

null hypothesis : பயனிலாப் புனைவுகோள் : கணிப்புகளில் காணப்படும் வேறுபாடுகளை அல்லது மாறுபாடுகளைக் கூறம் புனைவுகோள். இது அங்கொன்றும் இங்கொன்றுமான ஆதாரங்களிலிருந்து உருவாக்கப்படுகிறது. இந்தப் பயனிலாப் புனைவு கோள் தள்ளுபடி செய்யப்படும்போது குழுமங்களிடையே கண்டறியப்படும் வேறுபாடுகள், தற்செயலாக மட்டுமே நிகழாதவை எனக் கருதப்படும்.

nulligravida : கருவற்றப் பெண் : ஒரு குழந்தையை ஒருபோது கருத்தரிக்காத ஒரு பெண்.

nulliparity : குழந்தை பிறவா நிலை : குழந்தை எதுவும் பிறக்காத நிலை.