பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/753

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nutritional deficiency

752

nystagmus


nutritional deficiency : உணவு ஊட்டக் குறைபாடு : உணவில் ஊட்டச் சத்துகள் குறைவாக இருத்தல்.

nutritional odema : ஊட்டக் குறைவு வீக்கம் : ஊட்டச் சத்துக் குறைபாட்டினால் உண்டாகும் உடல் வீக்கம்.

nutritionist : உணவியல் வல்லுநர்.

nutritious : ஊட்டமான.

nutritiva : ஊட்ட உணவு.

nucterohemeral : இரவு பகல் சார்ந்த : பகல்-இரவு தொடர்பு உடைய.

nux vomica : எட்டிக்காய் : நரம்பூக்கி மருந்தாகப் பயன்படும் "எட்டிச்சத்து" (ஸ்டிரைக்னின்) எடுக்கப்படும் எட்டி மரத்தின் கொட்டை.

nyctalgia : இரவு வலி : இரவு நேரத்தில் ஏற்படும் வலி.

nyctalopia : மாலைக் குருடு; இரவுக் குருடு; மாலைக் கண்; நிசிக் குருடு : இருட்டில் மட்டும் தெளிவாக பார்வை தெரியாது.

nyctophobia : இரவுக்கிலி; இருள் அச்சம்; நிசிமருட்சி : இரவு நேரத்திலும், இருட்டிலும் ஏற்படும் இயல்பு மீறிய அச்சம்.

nycturia : இரவுச் சிறுநீர்க்கழிவு : இரவில் அடக்க முடியாமல் சிறுநீர் கழிதல்.

Nydrane : நிட்ரேன் : பெக்லாமைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

nymph : முட்டைப் புழுக்கூடு : ஒட்டுத் தோடுடைய இணைப் புடலி உயிரினங்கள் சிலவற்றின் வாழ்க்கைச் சுழற்சியில், முட்டைப் புழுவுக்கும், முதிர்வு நிலைக்கும் இடைப்பட்ட ஒருநிலை.

nymphectomy : அல்குல் அறுவை மருத்துவம் : உறுப்புப் பொருமல் பெண்குறியை துண்டித்து எடுத்தல்.

nymphae : அல்குல் சிறு உதடு; சிற்றிதழ்; சிற்றுதடு : புறப் பிறப்பு உறுப்பின் உதடு (இதழ்) சிறிதாக இருத்தல்.

nymphomania : மகளிர் கழி காமம்; பாலுறவு வேட்கை; காம மகள் : ஒரு பெண் அளவுக்கு மீறி காமஉணர்வு கொண்டிருத்தல்.

Nystaform : நிஸ்டாஃபார்ம் : பூஞ்சண எரிச்சலுக்குப் பூசப்படும் களிம்பு மருந்தின் வணிகப் பெயர்.

nystagmoid : கண்விழித் திறம்பாடு : கண்விழி ஊசலாட்ட நோயை ஒத்திருக்கிறது. குறுகிய காலம் நீடிக்கும் ஒழுங்கற்ற கண் விழிநடுக்கம். இது இயல்பான ஆட்களில் முழுமையான கிடைமட்டத் திறம்புதல்.

nystagmus : அதிகண்; ஆடு கண்; கண் விழி ஊசலாட்ட நோய்; விழி நடுக்கம்; கண் நடுக்கம் : கண்விழிகள் ஓயாமல் ஊசலாடும்