பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/756

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

objective lens

755

Obsession


நோயாளி உணர்ச்சி சாராமல் மற்றவர்கள் நோக்கும் தன்மையில்.

objective lens : காண் வில்லை.

obligate : உயிர் வாழ்திறன் மாற்றிலா : ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை களில் மட்டுமே உயிர் வாழ்வதற்கான திறம்பாடு. எடுத்துக்காட்டாக, ஒரு பிணைப்பு ஒட்டுண்ணி, ஒர் ஒட்டுண்ணியாக அல்லாமல் வேறுவிதமாக உயிர் வாழ முடியாது.

obligatory : கடப்பாடு.

obliquity : சரிவு.

oblique : உள்-புறத்தசைகள் : புறத்தேயும், உள்ளேயும் உள்ள கோணல்-சாய்வு வடிவத்தசைகள்.

OBS : கரிம மூளை நோய்.

obscenity : அருவருப்பு; ஆபாசம்.

obscession : மன அலைக்கழிப்பு : ஒருவர் மறக்க நினைத்தாலும் மனதில் நிறைந்து இடையறாது அலைக்கழிக்கும் எண்ணம், தூண்டல் அல்லது உருக்காட்சி.

observations : கூர்நோக்கு : அறிவியல் தகவல்களின் பெருந் தொகுதியின் முக்கியக் கட்டமைப்பு அலகுகள்.

obcessional neurosis : அலைக்கழிப்பு மூளைக்கோளாறு; விரும்பா உளவியக்கம்; பித்து நரம்பியம் : நோயாளியிடம் அவர் விரும்பாமலே வேண்டா நினைவுகள் தோன்றி அவரை அலைக்கழித்தல். இந்நினைவுகளை அகற்ற அவர் விரும்பினாலும், அவரது விருப்பத்திற்கு எதிராக இந்த எண்ணங்கள் இடைவிடாமல் தோன்றி அவருக்கு மனவேதனை உண்டாக்கும். ஒருவர் ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருப்பது இவ்வகையைச் சேர்ந்த இன்னொரு கோளாறு. அடிக்கடிக் கையைக் கழுவுவதும், கதவுப்பிடியை எப்போதும் பிடித்துக் கொண் டிருப்பதும் இவ்வகையைச் சேர்ந்தவை. குற்றவுணர்வு இதற்குப் பெரும்பாலும் காரணம். சேக்ஸ்பியரின் மாக்பெத் நாடகத்தில் அரசனைக் கொன்ற கணவனுக்கு உடந்தையாக இருந்த மாக்பெத் சீமாட்டி தன் கையில் இரத்தக் கறை படிந்திருப்பதாக எண்ணி அடிக்கடிக் கைகழுவும் மன நோய்க்கு ஆளாவதாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.

obsessive-compulsive : அலைக்கழிவு வல்லந்தம் : மன உளைச் சளிலிருந்து விடுபடுவதற்காக அடிக்கடியும், சடங்கு முறையிலும் சில செயல்களை ஒருவர் செய்யத் தூண்டுகிற இடை விடாத எண்ணங்கள் இருக்கும் கோளாறு. இது சில முச்சுழற்சி மனச்சோர்வு அகற்றும் மருந்து களால் குணமடைகிறது.

obsession : வெறியுணர்வு : தருக்க முறையான முயற்சிகள்