பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/757

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

obstertrician

756

occipitomental


மூலம் நனவு நிலையிலிருந்து அடியோடு நீக்க முடியாதிருக்கிற தடுக்கமுடியாத எண்ணத்துடன் அல்லது உணர்வுடன் கூடிய மனநிலை.

obstertrician : தாய்மை மருத்துவர்; மகப்பேறு மருத்துவர்; பேற்றியல் வல்லுநர் : மகப்பேற்று மருத்துவ வல்லுநர்.

obstetrics : தாய்மை மருத்துவம்; பேற்று மருத்துவம் : மகப்பேறு தொடர்பான மருத்தவ இயல்.

obstructed labour : தடைபடும் மகப்பேற்று வலி : இயல்பான முறையில் மகப்பேறு நடைபெற இயலாதிருக்கிற ஒருநிலை.

obstructed hernia : தடைபட்ட குடலிறக்கம் : இரத்தவோட்டம் தடைபடாமல் குடல் தடைகளை உண்டாக்கும் மேலும் குறுக்க முடியாத குடலிறக்கம்.

obstruction : அடைப்பு; தடை.

obstruction, intestinal : குடல் அடைப்பு.

obstruction, pyloric : வாயில் அடைப்பு.

obturator : எலும்புப் புழையடைப்பு; அடைப்புத் தட்டு; மூடி : ஒர் இடைவெளியை மூடிக்கொள்ளும் அடைப்பு. வயது வந்தவரிடையே மூன்று எலும்புகளின் இணைவாக உருவான இடுப்பு எலும்பின் இரு திறப்புகளும் தசைகளினாலும் தசை நார்களினாலும் மூடப்பட்டுவிடுதல்.

occipital : பின் மண்டை எலும்பு சார்ந்த பின்உச்சிய : தலையோட் டின் பின்புறமுள்ள எலும்பு. இதிலுள்ள பெரிய துவாரத்தின் வழியாக முதுகந்தண்டு செல்கிறது.

occipitalis : பிடரிப்பின்தசை : பிடரித் தசையின் பின்பகுதி.

occipitalization : பிடரி எலும்பு இணைப்பாக்கம் : கழுத்தெலும் புக்கும் பிடரிக்கும் இடையிலுள்ள எலும்புக் கூட்டிணைப்பு.

occipitobregmatic : பிடரி எலும்பு சார்ந்த : பிடரிக்கும் முன் தலைக்கும் இடையிலுள்ள எலும்பு சார்ந்த.

occipitocervical : பிடரி கழுத்து சார்ந்த : பிடரி மற்றும் கழுத்து தொடர்புடைய.

occipitofrontal : பிடரி முகம் சார்ந்த : பிடரியும், முகமும் தொடர்புடைய.

occipitofrontalis : பிடரிப்புடைப்பு : மண்டையோட்டின் உச்சியை மூடியிருக்கும் மெல்லிய அகலமான தசைகளின் இணையில் ஒன்று. இதில் தசைப்பட்டையினால் இறைக்கப்பட்ட ஒரு பிடரிப்புடைப்பை அடங்கியுள்ளது.

occipitomental : பிடரி-முகவாய்க்கட்டை சார்ந்த : பிடரியும், முகவாய்க் கட்டையும் சார்ந்த.