பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/758

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

occipitoparietal

757

Ochsner clasp...


occipitoparietal : பிடரி-உச்சி சார்ந்த : பிடரி மற்றும் மண்டையுச்சி எலும்புகள் அல்லது மூளையின் தொங்குதசை தொடர்புடைய.

occiptotemporal : பிடரி பொட்டெலும்பு சார்ந்த : பிடரி மற்றும் பொட்டெலும்புகள் தொடர்புடைய.

occiptothalamic : பிடரி பொட்டெடெலும்பு; மூளை நரம்பு சார்ந்த : பிடரிப் பொட்டெலும்பு, மூளை நரம்பு தொடர்புடைய.

occiput : பின்தலை; பிடரி : மண்டையின் பின்பகுதி.

occlusal : திறப்புவாயில் அடைப்பு சார்ந்த : மேற்பற்களுக்கும் கீழ்த் தாடைக்குடைமிடையிலுள்ள பிணைப்பு போன்று ஒரு திறப்பு வாயின் அடைப்பு தொடர்பான.

occlusion : உள்துளை நிரப்பு; குழல் அடைப்பு; மூடல்; மூடுகை : நாளங்களின் அல்லது இரத்த நாளங்களின் உள்துளையை அடைத்தல். பல் மருத்துவத்தில் கடைவாய்ப்பற்களின் புழையை அடைத்தல்.

occlusion, coronary : இதயத் தமனி அடைப்பு.

occult : மறை.

occupation : செய் தொழில்.

occupation, diseases : தொழிலிய நோய்.

occupancy : நோயாளர்-படுக்கை விகிதம் : மருத்துவமனையில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கைக்கும் தினமும் சிகிச்சைக்கும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு மிடையிலான சராசரி விகிதம்.

occupational therapy : (தொழில் முறை) பணிவரி மருத்துவம்; தொழிலிய நோய் : அன்றாட வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் உச்ச அளவு செயல்திறனையும், சுதந்திரத்தையும் எட்டும் வகையில், குறிப்பிட்ட நடவடிக்கைகள் மூலம் உடலியல் மற்றும் உடலியல் சிகிச்சையளித்தல்.

ochrometer : தந்துகிக் குருதி அழுத்தமானி : தந்துகி இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கான ஒரு கருவி.

ochronosis : புரத வளர்சிதை மாற்றக் கோளாறு : உடலில் உள் ளார்ந்துள்ள புரத வளர் சிதை மாற்றக்கோளாறு. இது அல்காப்டோன் சிறுநீர்ப் பொருள்கள் படிந்த, உடல் திசுக்களின் அடுக்குப்படிவு உண்டாக்குகிறது. ஒருபடித்தான அமிலம் இருத்தல் காரணமாக கண்காதுகளில் வெண்மை நிறம் உண்டாதல், மூட்டு வீக்கம், சிறுநீர் கரு நிறமாதல் உண்டாகிறது. Ochsner clasping test : ஆஷ்னர் பிடிப்புச் சோதனை : கைகள் பற்றிப் பிடிக்கும்போது ஆள்