பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/759

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Octapressin

758

oculomotor


காட்டி விரல் நீட்சியடையாமல், சுட்டுநிலையிலேயே இருத்தல். இது நரம்பு முடக்கு வாதத்தால் ஏற்படுகிறது. அமெரிக்க அறுவை மருத்துவ வல்லுநர் ஆல்பர்ட் ஆஷ்னர் இதனை விவரித்துக் கூறினார்.

Octapressin : ஆக்டாபிரசின் : பிரிலோக்கெய்ன், ஃபெலிப்பிரசின் இரண்டும் கலந்த கலவை மருந்தின் வணிகப் பெயர்.

Octipara : எட்டுக் கருக்குழந்தைப் பெண் : உயிர்வாழக்கூடிய எட்டுக் குழந்தைகளைக் கருவில் கொண்டிருக்கும் ஒரு பெண்.

octopamine : ஆக்டோபாமின் : போலிப்பரிவு அமின்; இது ஒரு பொய்யான நரம்பு ஊடு கடத்தி.

octreotide : ஆக்டிரியோட்டைடு : அமினோப்புரத இயக்குநீரை ஒத்த ஒரு செயற்கைப் பொருள் இது வளர்ச்சி இயக்குநீருடன் மிகுந்த ஒப்புமையுடையது. இது அகற்சி நோயுடைய நோயாளிகளிடம் குருதிவடிநீர் வளர்ச்சி இயக்குநீரைக் குறைத்து, நோய் அறிகுறிகளிலிருந்து விடுவிக்கிறது.

ocular : கண்ணுக்குரிய; விழியின்; கண் சார்ந்த : பார்வை சார்ந்த.

oculentum : கண் களிம்பு; அஞ்சனம்; கண் மை : கண்ணோய்க்குப் பயன்படும் களிம்பு மருந்து. கருவியில் பொருத்தப்படும் விழிக்கண்ணாடிச் சில்லு.

ocularist : செயற்கை விழியாக்குநர்.

oculist : கண் மருத்துவர் : கண் மருத்துவ வல்லுநர்.

oculocardiac reflex : இதயத் துடிப்பு முரண்பாடு : கண்ணில் அல்லது கண் அருகில் எழுகிற பலவகைத் தூண்டல்கள். இதனால், இதயத் துடிப்பு வீதத்தில் அல்லது ஒத்திசைவில் முரண்பாடுகள் உண்டாகின்றன.

oculocephalic reflex : கண்-தலை நோய் அனிச்சைச் செயல் : மூளைத்தண்டின் ஒருங்கிணைப்பைத் தீர்மானிக்கிற ஒரு சோதனை நோயாளியின் தலை திடீரென ஒருபக்கம் அசைந்து, பின்னர் மறுபக்கம் அசையும் போது கண்கள் பொதுவாகத் தலை அசைவுக்குக் காலந்தாழ்ந்து அசையும். கண்கள் மெல்ல மெல்ல நடுமையநிலைக்கு வரும். மூளைத்தண்டின் எதிர்ப்புறத்தில் நைவுப்புண் ஏற்படும்போது கண்கள் நடுமையத்துக்குத் திரும்பாமல் கண் பார்வை இழப்பு உண்டாகிறது.

oculogyration : கண்விழி நிலைப்பாடு : கண்விழி அதன் முன்பின் அச்சினைச் சுற்றி வடிவில் சுற்றி, கண்கள் மேலும், பக்கவாட்டிலும் நிலைப்பாடு கொள்ளுதல்.

oculomotor : கண்ணியக்க நரம்பு; கண்ணியக்க : மூன்றாவது மண்டை