பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

adiposistas

75

adrenal


adiposistas : அதிகொழுப்பு அமைவு.

adipositis : தோல் அடிக்கொழுப்பு அழற்சி.

adiposity : கொழுப்புடைமை; கொழுப்பேற்றம் : உடலில் அளவுக்கு மேல் கொழுப்பு சேர்தல்.

adiposuria : கொழுப்பினிச் சிறுநீர் : சிறுநீரில் கொழுப்பணுக்கள் வெளியேறுதல்.

adipsa : நீர் வேட்கை முறிப்பி.

adipsia : நீர் வேட்கையின்மை : தாகம் எடுக்காத நிலைமை.

aditus : அணுகுவாய்; அணுகு வழி : உடல் உறுப்புகளின் அமைப்பு பற்றி ஆராயும் , உடல் உட்கூறியலில், அணுகுவதற்கான நுழைவாயில் அல்லது திறப்பு வழி.

adjacent : அடுத்து.

adjunct : சேர்ப்பு: சேர்வைப் பொருள்.

adjunctive : துணைச் சேர்மம்.

adjustment : ஒத்துசைவு.

adjuvant : துணை மருந்து; துணையம் : மற்ற மருந்துகளின் வினைகளுக்கு உதவி புரிவதற்காகச் சேர்க்கப்படும் துணை மருந்துப்பொருள். முதன்மையான மருத்துவச் சிகிச்சையுடன் கூட இந்தத் துணை மருந்து அளிக்கப்படுகிறது.

adler's theory : ஆட்லர் கோட்பாடு : "வலுவான தாழ்மை உணர்ச்சி காரணமாகவே நரம்புக் கோளாறுகள் உண்டாகின்றன" என்னும் கோட்பாடு.

ad-lilbe : வேண்டுமளவு.

admission : சேர்தல்.

admit : சேர்.

adnauseam : குமட்டல் ஊக்கி.

adnerval : அட்நெர்வல் : நரம்புக்கு அருகில் அமைந்துள்ள. நரம்புசெல்லும் பாதையில் அமைந்துள்ள.

adnexa : அண்டை உறுப்பு : உடலில் ஒர் உறுப்புக்கு மிக நெருக்கமாகவுள்ள உறுப்புகள் அல்லது கட்டமைப்புகள்.

adolescence : இளமைப் பருவம்; வாலிபம்.

adoption : தத்து; ஏற்பு.

adrenal : அண்ணிரகம்; குண்டிக்காய் அழுத்த சுரபி; குண்டிக்காய் அழுத்த; சிறுநீரக மேவி : (1) சிறுநீரகத்திற்கு அருகில்; (2) அண்ணிரகச் சுரப்பி.

அண்ணிரகப் புறணி : அண்ணிரகச் சுரப்பியின் வெளிப்பகுதி. இது அண்ணிரக அகணியுடன் தொடர்புடையது. மினரலோ