பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/760

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

oculomasal

759

oedema


யோட்டு நரம்பு. இது கண்களை அசைத்து, மேல் இமையை அளிக்கிறது.

oculonasal : கண்மூக்கு சார்ந்த.

Oddi's sphincter : ஆடித்தசைச் சுருக்கம் : பொதுவான பித்தக் குழாய், கணையக்குழாய் இரண்டின் திறப்பு வாய்தகை முன் சிறுகுடலினுள் சுருங்கியிருத்தல். இத்தாலிய மருத்துவ அறிஞர் ரக்கரோஆடி என்பார் இதனை விவரித்துக் கூறினார்.

odds ratio : அபாய விகிதம் : அபாயக் காரணிக்கும் வெளிப் பாட்டுக்குமிடையிலான தொடர்பின் வலிமையை அளவிடுதல். இது தொடர்புறு அபாயத்துடன் நெருங்கிய தொடர்புடைய.

odontalgia : பல்வலி; பல் உளைச்சல்.

odontexesis : பல் மெருகேற்றும் : பல்காரையை அகற்றி பல்லுக்கு மெருகேற்றுதல்.

odontitis : பலழற்சி : பல் எகிறில் ஏற்படும் வீக்கம். இதனால், பல் அளவுக்கு மீறி விரிவடைதல்.

odontoblast : பல்லடிக்கூழ் உயிரணு : பல்லில் டென்டின் படிவதும், பல்மேற்பரப்பில் கூழ்ப்பொருள் உருவாவதும் தொடர்புடைய உயிரணு.

odontoclast : பல்வேர் உயிரணு : விழுகின்ற பல்லின் வேர்களை ஈர்த்துக் கொள்வதற்குக் காரணமான உயிரணு.

odontodysplasia : அதீத பல் வளர்ச்சி :' பல் வளர்ச்சியில் ஏற்படும் மட்டுமீறிய நிலைமை. இது இனாமல், டென்டின் உருவாக்கத்தில் குறைபாட்டைக் காட்டுகிறது.

odontogen : ஆட்டோன்டோஜன் : பல் டென்டின் உருவாக்கத்துடன் தொடர்புடைய பொருள்.

odontic : பல் சார்ந்த.

odontoid : பல் போன்ற; பல்லுரு; பல்லணைய.

odontology : பல் மருத்துவயியல்; பல்லியல்.

odontoma : பல்கட்டி; பல்புத்து : பற்களின் கட்டமைவுகளில் உண்டாகும் கட்டி.

odontotherapy : பல்நோய் மருத்துவம்; பல் மருத்துவம்.

odour : நெடி; வாடை; மணம்.

odourless : நெடியிலா.

odynophagia : உணவுக் குழாய் வலி : உணவை விழுங்கும்போது ஏற்படும் வலி. உணவுக்குழாய் அழற்சி, வாய் அழற்சி போன்ற நிலைமைகளில் இது ஏற்படுகிறது.

oedema : இழைம அழற்சி; நீர்க் கோவை; வீக்கம் : இழைமங்களில் உண்டாகும் நீர்க்கோவை. இது பல காரணங்களால்