பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/762

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

oesophagos...

761

old tuberculin


செல்லும் குழாய் இது 23செமீ நீளம் உடையது.

oesophagos copy : உணவுக் குழாய் கருவி; உணவுக் குழாய் நோக்கி; உண்குழல் காட்டி : உணவுக் குழாயினுள் செலுத்தி உள்ளுறுப்புகளைப் பார்க்கக் கூடிய கருவி.

oesophagotomy : உணவுக் குழாய் அறுவை; உண்குழல் அறுவைத் திறப்பு.

oesophagus : உணவுக்குழாய் : தொண்டையைக் கடந்து இறைப் பைக்குச் செல்லும் உணவுக் குழாய்.

oestrodia : கருஅண்ட சுரப்புநீர் : கருஅண்ட நுண்ணுறை உயிரணுக் களில் சுரக்கும் நீர். இது நுரை யீரலினால் ஊஸ்டிரோனாகவும், ஊஸ்டிரியோலாகவும் மாற்றப் படுகிறது.

oestrogen : கருப்பை இயக்குநீர் : கரு அண்டத்தில் சுரக்கும் இயக்குநீர்கள் பேற்றுமைக் காலம் முழுவதிலும் இவை சிறுநீரிலும் வெளியேறும்.

Ogden plate : ஆக்டென் தகடு : வடுப்பள்ளங்கள் உடைய நீண்ட உலோகத்தகடு. இது நீண்ட எலும்பு முறிவுகளை இணைக்கப் பயன்படுத்தப்படுகிறது.

Ogilvie's syndrome : ஆக்ளிவி நோய் : குடல் விரிவாக்கத்தினால் உண்டாகும் கடுமையான போலி குடல்தடை பிரிட்டிஷ் மருத்துவ அறிஞர் வில்லியம் ஆக்ளிவி பெயரால் அழைக்கப் படுகிறது.

Ogston's line : ஆக்ஸ்டான் வரி. தொடையெலும்பின் புடைப்புக்கும் எலும்புமுனை முடிச்சு வரையுள்ள ஒரு வரி. ஸ்காட்டிஷ் அறுவை மருத்துவ அறிஞர் அலெக்சாண்டர் ஆக்ஸ்டான பெயரால் அழைக்கப்படுகிறது.

Ohis bed : ஒகிலோ படுக்கை : தீவிர மருத்துவப் பிரிவிலுள்ள குழந்தைகளுக்கான திறந்த பக்கமுடைய படுக்கை. குழந்தையின் உல்வெப்ப நிலையைப் பேணுவதற்கான சாதனங்களையும் வசதிகளையும் குழந்தை யைச் சுற்றி வைப்பதற்கு இதில் போதிய இடவசதி அமைந்திருக்கும்.

oid-oid disease : ஆய்ட்-ஆய்ட் நோய் : கசிவுத்தோல் அழற்சியும், படை நோய் இரண்டும் இணைந்த நோய்.

ointment : களிம்பு : மருந்து நெய்.

old tuberculin : பழைய காச நோய்க் கிருமி (OT) : இயல்பு நீக்கிய ஒரு கலவைப் பொருள். துண்காச நோய்க் கிருமியிலிருந்து உண்டாகும் பெரும் எண்ணிக்கையிலான நுண்ணுயிரி காப்பு மூலங்கள். இது காச நோய்க் கிருமிச் சோதனையில் பயன்படுத்தப் படுகிறது.