பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/763

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Oleander

762

oligospermia


oleander : அலரி : கார்டியாக் கிளைக்கோசைடு கொண்டுள்ள ஒரு நச்சுப் புதர்ச்செடி.

olecranon : முழங்கை முனை; முன்கை எலும்பு பிதுக்கம் : முழங் கைப்பகுதியிலுள்ள முன்கை அடியெலும்பு, உடலின் மையத்தை நோக்கித் துருத்திக் கொண்டிருத்தல், முன்கை நீண்டிருக்கும் போது புயஎலும்பின் பள்ளத்தினுள் பொருந்தி இருத்தல்.

olestra : ஒலெஸ்டிரா : 'சுக்கோஸ்' என்ற சர்க்கரை, டிரை கிளிசரைடுகள் ஆகியவற்றின் மீச்சேர்மம். இது உறிஞ்சிக் கொள்ளப் படுவதில்லை. இது போலி கொழுப்பு போல் செயற்படுகிறது. இதன் விளை வாக கொழுப்பு குறைந்த அளவில் உட்கொள்ளப்பட்டு, அதனால், மொத்தக் கலோரிகளின் அளவு குறைகிறது.

oleo-vitamin : ஓலியே-வைட்டமின் : மீன் ஈரல் எண்ணெய் அல்லது உண்ணத்தக்க தாவர எண்ணெய். இதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் அடங்கியுள்ளன.

oleum ricini : விளக்கெண்ணெய் : ஆமணக்கு விதையிலிருந்து எடுத்த எண்ணெய்.

olfaction : நுகர்வுணர்வு / மோப்பம் / மணம் உணர்தல் : வாசனை அறியும் உணர்வு.

olfactories : நுகர்; நுகர்வுறுப்புகள் : முகர்வுணர்வுக்குரிய உறுப்புகள்.

olfactory : நுகர்வுணர்வு சார்ந்த; நுகர்ச்சி; மோப்ப; நாசி சார்ந்த.

oligaemia : குருதிக் குறைபாடு; குறை குருதி : இரத்தத்தின் மொத்த அளவு குறைவாக இருத்தல்.

oligodendrogiia : நரம்புசாரா உயிரணுக்கள் : புறத்தோலில் உண்டாகும் நரம்புசாராத உயிரணுக்கள். இவை மைய நரம்பு மண்டலத்தின் மூளை ஆதாரத் திசுவின் ஒரு பகுதியாகிறது.

oligohydramnios : கருந்திரவக் குறைபாடு; குறைநீர்ப் பனிக்குடம்.

oligomenorrhoea : சீரற்ற மாதவிடாய்; மாதவிடாய் குறை ஒழுக்கு : மாதவிடாய் உரிய காலத்தில் நிகழாதிருத்தல், மாதவிடாய் இயல்பான காலச்சுழற்சிக்கு மேற்பட்டு 35 நாட்களுக்கு மேலும் நீடித்தல்.

oligophrenia : மன வளர்ச்சிக் குறைபாடு; உள வளர்ச்சிக் குறை : மன வளர்ச்சி இயல்புக்குக் குறைவாக இருத்தல்.

oligosaccharide : ஓலியோ சாக்கரைடு : ஒற்றை சாக்கரைடு அலகு களில் சில எண்ணிக்கையிலான ஒரு கூட்டுப்பொருள்.

oligospermia : விந்தணுக் குறைபாடு; விந்தணுக் குறை; விந்துக் குறைவு : ஆணின் விந்தில் விந்த