பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/764

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

oliguria

763

Ompholith


ணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல்.

oliguria : சிறுநீர்ச் சுரப்புக் குறைவு; குறைச் சிறுநீர்; நீர்ச் சுண்டி; நீர்க் குறை.

olophonia : பேச்சுக் குறைபாடு : குரல் நூண்கள் திரிபடைந் திருப்பதால் ஏற்படும் பேச்சுக் குறைபாடு.

Omegasign : ஒமேகா குறியீடு : முகம் சுளிக்கும்போது புருவத்தைச் சுருக்கும் தசை நிலையாகச் சுருங்குவதால் உண்டாகும். சுரிப்புப் புருவத்துடன் கூடிய முகபாவம். இது, மனச் சோர்வுடைய நோயாளிகளிடம் காணப்படும்.

omentectomy : வபை மடிப்பு அறுவை மருத்துவம் : வபை மடிப்பு முழுவதையும் அல்லது அதன் பகுதியை வெட்டி எடுத்தல்.

omentopexy : வபை-திசு இணைப்பு : வபை மடிப்பினை திசு எதனுட னும் பொருத்துதல் பக்கக் குருதியோட்டத்தை ஏற்படுத்த இது செய்யப்படுகிறது.

omentum : வபை மடிப்பு : குடல் போன்ற மற்ற வயிற்று உறுப்பு களுடன் இரைப்பையை இணைக்கும் வபை மடிபபு.

omnifocal : இருநோக்குக் கண்னோடி : கிட்டப் பார்வை தூரப்பார்வை இரண்டுக்கும் பயன்படக்கூடிய ஒரு முக்குக் கண்ணாடி. இதிலுள்ள படிக்கும் பகுதி மாறுபடும் வளைவாக இருக்கும்.

omnipotence : பேராற்றல் : எல்லாம் வல்ல தன்மை வாய்ந்த, மிக உயர்வாகவும், சக்தி வாய்ந்ததாகவும் கருதப்படும் தலைசிறந்த பொருள். அகப்புற மூல இயல்பின் பிற அம்சங்களை மறுத்தல். இது ஒரு பித்தனின் தற்காப்பு போன்றது.

Omnopon : ஓம்னோப்போன் : பாப்பாவெரேட்டம் என்ற மருந்தின் வணிகப் பெயர். இதில் 50% மார்ஃபின் அடங்கி உளளது.

omoplate : தோள் பட்டை எலும்பு.

omphalitis : தொப்புள் அழற்சி; உந்தி அழற்சி : தொப்புளில் ஏற்படும் வீக்கம்.

omphalocoele : குடல் துருத்தம் : உந்திக்குழியின் அடிவயிற்றுச் சுவரிலுள்ள ஒரு குறைபாட்டின் வழியாக பிறவியிலேயே குடலின் ஒரு பகுதிதுருத்திக் கொண்டிருத்தல்.

omphaloma : உந்திக் குழிக் கட்டி : உந்திக் குழியில் ஏற்படும் கட்டி.

omphalotomy : கொப்பூழ்க் கொடியைப் பிரித்தல்.

Ompholith : உந்திக் குழிக்கல் : முடி, அழுக்கு, செதிலுறவு