பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/772

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

orange person...

771

organ


orange person syndrome : ஆரஞ்சுத்தோல் நோய் : தோலுக்கு நிறமூட்டும் ரிஃபாபிசின் மிகைப்படுவதால் உண்டாகும் அரிதாக பக்கவிளைவு. அடர் ஆரஞ்சு நிற உடல் திரள்கள் இதில் ஈரல் செயல் முறைகள் அளவுக்கு மீறியதாக இருக்கும்.

Orap : ஒராப் : பிமோசைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

oraserrate : கண்வாயில் ரம்ப விளிம்பு; வாள் முள் வாயில்.

Oratrol : ஒராட்ரோல் : டைகலோர் ஃபினாமைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

orbenin : ஆர்பெனின் : குளோக்சாசிலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

orbicular : கோள வடிவுடைய; வளைய : உருண்டையான அல்லது வட்ட வடிவுடைய.

orbicularis : திறப்பு சூழ்தசை : ஒரு திறப்பினைச் சுற்றியுள்ள தசை. கண்ணை இருக்கமாக மூடுவதற்கு உதவுகிற கண் சார்ந்த தசை உதடுகளைக் குவிப்பதற்கு உதவும் தசை.

orbicular muscle : துளை சுருக்ககும் தசை.

orbit : கண்குழி : கண்விழியையும் அதன் இணைப்புகளையும் உள்ளடக்கிய எலும்புக் குழி.

orbitale : கண் குழியின் தாழ் நிலைப் புள்ளி : கண்குழியின் கீழ் விளிம்பு நெடுகிலுமுள்ள மிகத் தாழ்நிலைப் புள்ளி.

orbital cellulitis : கண்குழி திசு அழற்சி.

orchidectomy : விரை அறுவை; விரை நீக்கம்; விரை எடுப்பு; விரை யகற்றல் : விரையினை வெட்டி எடுத்தல்.

orchiopexy : அண்ட விரை அறுவை மருத்துவம் : இறங்க முடியாத விரையை அண்ட கோசத்தினுள் அறுவை மருத்துவம் மூலம் பொருத்துதல்.

orchioschirrhus : அண்ட விரைக் கெட்டியாதல் : கட்டி உண்டாவதால் அண்ட விரை கடினமாதல்.

orchis : விரை : ஆணின் விரைக் கொட்டை.

orchitis : விரையழற்சி : விரைக் கொட்டை வீக்கம்.

order : வரிசை முறை : நிகழ்வுகள், விதிகள், ஒழுங்கு முறை விதிகள், நடைமுறைகள் ஆகியவற்றின் ஒழுங்கு அல்லது வரிசை முறை.

organ : உறுப்பு : ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்கிற உடலின் உறுப்பு எதுவும், உறப்பு மாற்றத்துக்கான சில திசுக்களை நீண்ட காலத்துக்குச் சேமித்துவைக்கும் ஒரு சேமக் கலம்.