பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/774

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

orifice

773

othochromatic


orifice : துளை; ஒட்டை; நுழை வழி; திறப்பு : புழைவாய்; துவாரம், வாயில் திறப்புவழி.

orificeanal : மலவாய்.

origin : தோற்றுவாய்; தொடக்கம்; எடுப்பு : ஒன்றன் பிறப்பிடம்; தொடக்கம், மூலாதாரம்.

ornithinaemia type I : இனக்கீற்று நலிவு வகை I: தன் இனக்கீற்று நலிவு நிலை. இது "HHH' நோயுடன் சேர்ந்து காணப்படும்.

ornithinaemia type II : தன் இனக்கீற்று நலிவு வகை II : கண்விழி படலம் மற்றும் விழித்திரை ஆகியவற்றின் சுழல் உடல் நலிவு (ஹோகா நோய்) நோயுடன் இணைந்து காணப்படும் நிலை. இதனால் மெல்ல மெல்லப் பார்வை இழப்பும், கிட்டப்பார்வையும், மாலைக் குருடும் உண்டாகும்.

ornithine : ஆர்னித்தின் : அமினோ அமிலங்களில் ஒன்று. யூரியா வைப் பகுத்துக் கிடைக்கும் ஆர்ஜினினிலிருந்து பெறப்படுகிறது.

ornithosis : பறவை நோய் : இது மிகக்கடுமையான, பொதுவாகப் பரவும் பறவை நோய். இது மனிதருக்கும் தொற்றும். இது கிளிக்காய்சல் மூலம் உண்டாகிறது. இது இன்ஃபுளுயென்சா நோய் போன்றது. இதனை டெட்ராசைக்ளின் அல்லது எரித்திரோமைசின் மூலம் குணப்படுத்தலாம்.

orofacial : வாய்-முகம் சார்ந்த : வாய், முகம் தொடர்புடைய.

orogenital : வாய்; பிறப்புறுப்பு சார்ந்த : வாய், பிறப்புறுப்புப் பகுதி தொடர்பான.

orolingual : வாய் நாக்கு சார்ந்த : வாய், நாக்கு தொடர்புடைய.

oromandibular-dystonia : வாய்-நாக்கு அனிச்ச இயக்கம் : வாயும் நாக்கும் தானாக இயங்குதல்.

oronasal : வாய்-மூக்கு சார்ந்த : வாய், மூக்கு தொடர்புடைய.

oropharynx : அண்ணத் தொண்டைப் பகுதி : மென் அண்ணத்துக்கும் குரல்வளை மூடிக்கு மிடையிலுள்ள தொண்டைப்பகுதி.

orphenadrine : ஆர்ஃபென்னாட்ரின் : பார்க்கின்சன் நோயில் பயன்படுத்தப்படும் பித்த நீருக்கு எதிரான மருந்து, தூக்க மருந்துகளினால் ஏற்படும் பார்க்கினான் நோயை இது குறைக்கிறது.

orrhodiagnosis : குருதி வடிநீர் நோய் நாடல் : குருதி வடிநீர் மூலம் நோயைக் கண்டறிதல்.

ORs : வாய்வழி நீர்மக் கரைசல் : வாய்வழி கொடுக்கப்படும் நீர் கலந்த கரைசல்.

ORT : வாய்வழி நீர்ம மருத்துவம்.

othochromatic : இயல்பு நிறம் : இயல்பான நிறம் கொண்டிருத்தல்