பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/775

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

orthodeoxia

774

orthopnoea


அல்லது இயல்பாகக் கறை படிதல்.

orthodeoxia : தமனி ஆக்சிஜன் குறைபாடு : நிமிர்ந்த நிலையில் இருக்கும்போது தமனி ஆக்சிஜன் செறிவு குறைதல்.

orthodiagrphy : இதயநிழல் படியெடுப்பு : இதயத்தின் நிழலை துல்லியமாகப் படியெடுத்தல்.

orthodontics (orthodontia) : பல் சீரமைப்பியல் : பற்கள் தாறுமாறாக அமைவதைத் தடுத்துச் சீர்படுத்தும் பல் மருத்துவத்தின் ஒரு பிரிவு.

orthodontist : பல்சீரமைப்பு வல்லுநர் : பல் சீரமைப்பில் துறை போகிய ஒரு பல் மருத்துவ அறிஞர்.

orthodox sleep : எற்புடை உறக்கம் : ஒவ்வொரு உறக்கச் சுழற்சி யின்போதும் ஏறத்தாழ ஒரு மணி நேரம் நீடிக்கும் தூக்கம். இதில் வளர்சிதை மாற்ற வீதமும், அதனால் ஆக்சிஜன் நுகர்வளவும் குறைவாக இருக்கும்.

orthokinetic : உணர்வு நரம்பு தூண்டல் : தசைகள், தசைநாண்கள் ஆகியவற்றின் உணர்வு நரம்பு முனைகளைத் தூண்டி விடுவதற்காகப் பயன்படுத்தப் படும் தூண்டுதல் உத்திகள்.

orthomyxoviruses : கோளக் கிருமிக் குடும்பம் : இன்ஃபுளுயென்சா நோய்க்கிருமிகள் உள்ளடங்கலாகப் பெரிய, கோள வடிவ நோய்க்கிருமி களின் ஒரு குடும்பம்.

orthopaedics : முட நீக்கியல்; எலும்பியல் : உடல் இயக்கத்தைப் பாதிக்கும் அனைத்து நிலைகளையும் சீர் படுத்துவதற்கான அறுவை மருத்துவப் பிரிவு.

orthopaedic traction : முடநீக்க இழுவை : ஒரு நோயாளியை எடைக் கற்களுடன் கட்டிய கயிறுகள் கப்பிகளுடன் இணைத்துப் பராமரிக்கும் ஒரு நடைமுறை. இதில் ஒர் உறுப்பின் அல்லது உடற் பகுதியின் மீது இழு விசையைச் செலுத்தி எதிர் இழுவிசைப் பேணப்படுகிறது.

orthopaedy : அங்கக்கோணல் அறுவை மருத்துவம் : உடல் உறப்புக் கோணல்களைச் சீர் படுத்துவதற்கான அறுவை மருத்துவம்.

orthopaedist : முடநீக்கியல் வல்லுநர்.

orthopercussion : எலும்பு மூலந்தட்டுதல் : தட்டுக்கொட்டுமானி விரலின் முனையைத் தனி எலும்பில் மூலந்தட்டுதல். இதில் மார்புச் சுவருக்குச் செங்குத்தாக விரலை வைத்துத் தட்டப்படுகிறது.

orthopnoea : கிடக்கை மூச்சுத் திணறல்; குந்து மூச்சு : நிமிர்ந்து