பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/776

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

orthopnoeic...

775

Ortolani click


உட்கார்ந்தால் குணமாகக்கூடிய மூச்சுத் திணறல் நிலை படுத்தால் மிகைப்படும் மூச்சுத்திணறல்.

orthopnoeic position : எளிய சுவாச நிலைப்பாங்கு : சுவாசத்தை எளிமையாக்கும் உடல் நிலைப்பாங்கு. இதில், நோயாளி, உட்கார்ந்து கொண்டு, கைகளை மேசை மீது ஊன்றி முன்புறமாக வளைகிறார்.

orthopsia : அந்திப் பார்வைத்திறன் : அந்தி நேரத்தில் பொருள்களைப் பார்ப்பதற்கான திறன்.

orthoptic : கண்நோயியல் சார்ந்த.

orthoptics : கண்நோயியல்; மாறுகண்; வாணக்கண் மருத்துவம் : மாறுகண் நோயில் தசை சமநிலையின்மையை ஆராய்ந்து குணப்படுத்தும் ஆய்வியல்.

orthoreovirus : குடல் சுவாசக் கோளாறு : மிக அரிதாக ஏற்படும் குடல் அழற்சி மற்றும் மேல் சுவாசக் கோளாறு.

orthosis : உடல் ஊன நீக்கி : உடலில் ஊனமாகவுள்ள பகுதியில் பொருத்தப்படும் ஒரு சாதனம் ஊனத்தை நேர் செய்தல்.

orthostatic : நிமிர் விறைப்பு : நிமிர்ந்து நிற்பதால் உண்டாகும் உடல் விறைப்பு நிலை.

orthotics : முடநீக்கக் கருவியியல் : உடலில் ஊனமாகவுள்ள பகுதியில் பொருத்தப்படும் சாதனங்கள் பற்றி ஆராய்ந்து, அவற்றைத் தயாரிப்பது பற்றிய அறிவியல் ஆய்வு.

orthotist : முடநீக்கக் கருவியல் வல்லுநர்.

orthotolidine test : குளோரின் அளவீட்டுச் சோதனை : நீரில் தனியாகவும், இணைந்தும் இருக்கும் குளோரின் அளவை அளவிடும் சோதனை.

orthotonus : விறைப்பு நோய் : நரம்பிசிவு விறைப்பினால் உடலில் ஏற்படும் வளையாத விறைப்பான நிலை. இது நரப்பிசிவு நோய், ஸ்டிரிக்னைன் நஞ்சு ஆகியவற்றில் காணப்படும்.

Orthoxine : ஆர்த்தோக்சின் : மெத்தோக்சைஃபெனிராமின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

orthropsia : அந்திசந்தி தெளிவுப் பார்வை : பிரகாசமான சூரிய ஒளியைவிட விடியலில் அல்லது அந்தியில் பார்வை அதிகத் தெளிவாகத் தெரிதல்.

Ortner's syndrome : ஆர்ட்னர் நோய் : ஈரிதழ்த் தடுப்புக் கறக்கத்தில் எதிர்த்திசை திரும்பும் குரல்வளை நரம்பில் முடக்குவாதம் ஏற்படுவதால் உண் டாகும் குரல் கம்மல். விரிவாக்கமடைந்த இடது இதய வாயில் மூலம் நரம்பு அழுத்தப்படலாம்.

Ortolani click : ஆர்ட்டோலானிகிளிக் : பந்துக் கிண்ணக் குழிவுக்குள் திரும்புகிற தொடை