பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/777

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Ortolani's sign

776

Osler-Weber...


யெலும்பின் தலைப்பகுதி உண்டாக்கும் ஒலி மரபுவழி இடுப்புப் பிறழ்வுக்குச் சான்றாகத் தீர்மானிப்பதற்குப் பயன்படுத்தப்படும் சோதனை. இத்தாலிய எலும்பு அறுவை மருத்துவ வல்லுநர் மாரியஸ் ஆர்ட்டோலானி பெயரால் அழைக்கப்டுகிறது.

Ortolani's sign : இடுப்பு இடப்பெயர்வுச் சோதனை : மகப்பேற் றுக்குப் பிறகு, இடுப்பு இடம் பெயர்ந்திருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கான சோதனை.

Orudis : அரூடிஸ் : கெட்டோப்ரோஃபென் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

os : கருப்பை வாய்; துளை : குழிவான பை போன்ற ஒரு உறுப்பு புழை போன்ற மற்றொரு உறுப்புகள் நுழைவாயில் வாய், திறவு பாதை, பெண்ணின் கருப்பை வாய்க்குழாய்.

os, external : புறத்துளை.

os, internal : உட்துளை.

oscillation : ஊசலாட்டம் அலைவு; சீரசைவு : இருமுனைகளுக்கு மிடையே இங்குமங்கும் அசைதல் அல்லது ஊசலாடுதல்.

oscillograph : மின் ஊசலாட்டப் பதிவு கருவி : மின் ஊசலாட் டங்களைப் பதிவு செய்வதற்கான ஒரு சாதனம்.

oscillometry : ஊசல் அளவை : ஒரு தனிவகை ஊசல்மானியைப் பயன்படுத்தி ஊசலாட்டத்தை அளவிடுதல்.

os calcis : குதிகால் எலும்பு.

osgood-Schlatter's disease : ஆஸ்குட்-விலேட்டர் நோய் : முன்கால் எலும்புப் புடைப்பில் ஏற்படும் வீக்கம். இதில் முழங்காலுக்குச் சிறிது கீழேயுள்ள எலும்பு மேட்டில் மென்மையான, அதைப்பான வீக்கம் காணப்படும். அமெரிக்க எலும்பு மருத்துவ அறிஞர் ராபர்ட் ஆஸ்குட், ஜூரிக் அறுவை மருத்துவ அறிஞர் கார்ல் விலேட்டர் ஆகியோர் பெயரால் அழைக்கப்படுகிறது.

Osler's nodes : ஆஸ்லர் கரணைகள்; ஆஸ்லர் கணுக்கள் : விரல்கள், கால்விரல்கள், உள்ளங்கை, உள்ளங்கால் ஆகியவற்றின் தசைகளில் ஏற்படும் சிறிய வேதனை தரும் பகுதிகள். பாக்டீரியாவினால் உண்டாகும் குலையணைச் சவ்வு வீக்கத்தின் போது குருதிக்காற்றுக் குமிழ் களினால் ஏற்படும் கரணைகள்.

Osler-Weber-Rendu syndrome : ஆஸ்லர்-வெபர்-ரெண்டு நோய்: குருதிப்போக்குத் தந்துகி விரிவாக்க நோய், லண்டன் மருத்துவ வல்லுநர் ஆஸ்லர் ஃபிரடரிக் வெபர், ஃபிரெஞ்சு மருத்துவ அறிஞர் ஹென்றி ரெண்டு ஆகியோர் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த நோய் மரபு