பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

adrenal glands

77

adrenergic


நீர் உடலை போராடுவதற்கு (அல்லது) தப்பிப்பதற்குத் தயார் செய்கிறது. இந்த இயக்குநீரைச் செயற்கை முறையிலும் தயாரிக்காலம். புறத் தூண்டுதலால் உயிர்மம் முழுதும் எதிரியங்குறுவதில், இந்த நீர் பானமாக உட்கொள்ளப்படுகிறது. நிண நீருசியால் உண்டாகும் கொப்புளக் காய்ச்சல், மூச்சுத் தடையுடன் கூடிய ஈளை நோய் (ஆஸ்த்மா), காஞ் சொறித் தடிப்பு போன்ற ஒவ்வாமை நோய்களுக்கு ஊசி மூலம் இது செலுத்தப்படுகிறது. உறுப்பெல்லை உணர்வு நீக்கக் கரைசல்களில், விரவிப் பரவுவதைக் குறைப்பதற்காகவும், உணர்விழப்பு நிலையை நீடிப்பதற்காகவும் இது சேர்க்கப்படுகிறது. இரத்த ஒட்டச் சீர்குலைவு நிலைகளில், மிகவும் நீர்த்த கரைசலாக (1 : 1,00,000) மெது, மெதுவாக நரம்பு மூலம் செலுத்தப் படுகிறது.

adrenal glands : அண்ணீரகச் சுரப்பி : இவை சிறுநீரகத்தை அடுத்துள்ள சுரப்பிகள், இந்தச் சுரப்பியின் உட்பகுதியான உட்கருவிலிருந்து ஊறும் 'அட்ரினலீன்' எனப்படும் சுரப்பு நீர் இரத்தத்தில் பாய்ந்து, திடீர் அச்சம் அல்லது கோபத்தின்போது விரைவான இதயத்துடிப்பு, வெறுத்த முகம் போன்ற விளைவுகளை உண்டாக்குகிறது. இந்தச் சுரப்பியின் புறப்பகுதி உள்ளுறுப்பு மாறுதல்களை உண்டாக்குகிறது. பறவைகளிலும் மீன்களிலுமுள்ள இந்தச் சுரப்பிகள் முற்றிலும் வேறானவை.

adrenalinuria : அண்ணீர் கலந்த சிறுநீர் : சிறுநீரில் அண்ணீர் கலந்திருத்தல்.

adrenalism : அண்ணீரகக் குறைபாடு : அண்ணீரகச் சுரப்புக் குறையும்போது உண்டாகும் நோய்நிலை.

adrenalitis : அண்ணீரக அழற்சி : அண்ணீரகச் சுரப்பிகள் அழற்சி யடைதல்.

adrenal medulla : அண்ணீரக அகணி.

adrenalopathy : அண்ணீரகச் சுரப்பி நோய்.

adrenarche : மறைவிட முடித் தூண்டல் : வாலிபப் பருவத்தை அடையும்போது அண்ணீரகத்திலிருந்து சுரக்கப்படும் ஆண்மையூக்கி இயக்குநீரால் அக்குளிலும், பெண்குறிப் பகுதியிலும் முடிகள் முளைப்பது தூண்டப் படுதல்.

adrenergic : அண்ணீரகச் சுரப்பி நீர் நரம்புகள் : குண்டிக்காய்ச் சுரப்பு நீரையோ, குண்டிக்காய்ச் சுரப்பு அல்லாத இயக்கு நீரையோ அவற்றின் சேர் முனையங்களிலிருந்து வெளியேற்றுகிற நரம்புகள், பெரும்