பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/780

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

osteoblastoma

779

ostegcranium


osteoblastoma : நாளக்கட்டி : எலும்பில் ஏற்படும் ஒரு சிறிய உக்கிரமற்ற நாளக்கட்டி.

osteochondritis : எலும்பு அழற்சி; மெல்லெலும்பு அழற்சி; குருத்தெலும்பழற்சி : குருத்தெலும்பு போன்ற மெல்லெலும்புகளில் ஏற்படும் வீக்கம். பொதுவாக நச்சுத் தன்மையில்லா நிலைமையைக் குறிக்கும்.

osteochondroma : எலும்புக்கட்டி; குருத்தெலும்பு மிகைக்கட்டி : எலும்பு போன்ற உக்கிரமல்லாத கட்டி.

osteochondromatosis : மூட்டுச் சவ்வுப்படல நோய் : மூட்டு உறைச் சவ்வுப் படலத்தில் அரிதாக ஏற்படும் நோய். இந்தப் படலத்தின் மேல் மடிப்புகள் ஊசலாட்டமடைந்து குருத்தெலும்பில் மாற்றம் உண்டாகிறது. இவை சுதந்திரமாக அசையும் உறுப்புகள் போல் தனிமைப் பட்டுவிடுகின்றன.

osteochondropathy : குருத்தெலும்பு நோய் : எலும்பையும் குருத்தெலும்பையும் பாதிக்கும் நோய்.

osteochondrosis : எலும்ப இணைப்பு மைய நோய் : குழந்தைகளின் எலும்பு இணைப்பு மையத்தில் உண்டாகும் ஒரு நோய். இதில் திசு அழிவைத் தொடர்ந்து புத்துயிர்ப்பு ஏற்படும்.

osteoclasia : எலும்புத் திசு அழிவு : எலும்புத் திசுக்கள் உறிஞ்சிக் கொள்ளப்பட்டு அழிக்கப்படுதல்.

osteoclasis : எலும்பை முறித்தல்; எலும்புத் திசுச் சிதைவு : நீண்ட எலும்புகளின் உருத்திரிபுகளை சீர் செய்வதற்காக ஒரு எலும்பை வலுக்கட்டாயமாக வளைத்தல் அல்லது அரைகுறையாக முறித்தல். குணப்படுத்தக் கூடிய எலும்பு முறிவு.

osteoclast : எலும்பு அழிப்பு உயிரணு : தேவையில்லாத எலும்பைக் கரைத்து விடுகிற அல்லது அகற்றி விடுகிற எலும்பு உயிரணு.

osteoclast-like giant cell : அரக்க உயிரணு : எலும்புத்திசு போன்ற அரக்க உயிரணு. இதில் ஏராளமான சிவப்பூதாச் சாயக் குருணை அல்லது ஒரு சீர்மையான திசுப்பாய்மம் அடங்கியிருக்கும். இதில் ஏறத்தாழ நூறு ஒரு சீர்மையான முட்டை வடிவ உட்கருக்கள் இருக்கும்.

osteoclastoma : எலும்பு அழிப்பு உயிரணுக்கட்டி; எலும்பழிப் புற்று : எலும்பு அழிப்பு உயிரணுக்களில் ஏற்படும் கட்டி இது பெரும்பாலான ஒரு நீண்ட எலும்பின் முனையில் உண்டாகும். இது உக்கிரமானதாகவோ உக்கிரமற்றதாகவோ இருக்கலாம்.

osteocranium : முதிர் கருக் கபாலம் : எலும்பாக்கத்தின் பல்