பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/786

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Overdose

785

overshoot...


மேம்பட்ட ஆதரவும் உறுதிப்பாடு அளிப்பதற்காக எஞ்சியுள்ள வேர்கள் பல் தொகுதியைத் தாங்கி நிற்கும்.

overdose : மிகை மருந்தளவு : ஒரு மருந்தினை அல்லது நோவ கற்றும் மருந்தினைப் பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மிக அதிகமாக உட்கொள்ளுதல்.

overhang : தொங்குபொருள் : பல்லை நிரப்பும் பொருளின் மிகையான அளவு. இது இணைவுடைய பல் குழிவு விளிம்புக்கு அப்பால் நீட்டிக் கொண்டிருக்கும்.

ovarious: முட்டையுள்ள.

ovariotomy : கருவக அறுவை : பெண் கருப்பையை அகற்று வதற்கான அறுவை மருத்துவம்.

ovaritis : அண்டகோச அழற்சி.

overjet : பல் துருத்தம் : மேற் பற்கள், கீழ் பற்களுக்கு அப்பால் கிடைமட்டத்தில் துருத்திக் கொண்டிருத்தல்.

ovary : கரு அண்டம்; சூல்; சுரப்பி; முட்டைப் பை : கருப்பையின் பிற்பகுதியில் இருபுறமும் அமைந்துள்ள இரு சிறிய முட்டை வடிவச் சுரப்பிகள்.

overlap syndrome : மேற் கவிதல் நோய் : நோய்கள் ஒருங் கிணைந்திருத்தல். இணைவுத் திசு நோய்கள், குரோன் நோய், நைவுப் புண், பெருங்குடல் அழற்சி, பார்க்கின்சன் நோய் தசையழுகல், குருதி நாள அழற்சி, பல தமனி அழற்சி, சர்க்-ஸ்டிராஸ் நோய் ஆகியவை இணைந்திருத்தல்.

overcompensation : முரட்டு நடத்தை : ஒருவர் தன்னிடமுள்ள குறைபாட்டினை மூடி மறைப்பதற்காகக் கையாளும் ஒருவகை நடத்தை முறை. எடுத்துக்காட்டாக, அச்சம் அடைந்த ஒருவன், திமிராக அல்லது தற்புகழ்ச்சியுடன் அல்லது சண்டைக்கு வருவது போன்ற முரட்டுத்தனமாக நடந்துகொள்வான்.

ovulation : சூல் முட்டை வெளியேற்றம்; சினை முட்டை விடுப்பு; சூல் வெளிப்பாடு : கரு அண்டத்தில் கருச்சத்து முதிர்ச்சியடைந்து வெடித்து சூல் முட்டையாக வெளி வருதல்.

overlearning : மிகைக்கற்றல் : முற்றிலுமாகத் துறை போவதற்குத் தேவைப்படும் அளவை விட அதிகமாகத் திரும்பத் திரும்பக் கற்றல்.

overload : மிகைப் பளு : அசைவதற்கு அல்லது செய்முறைப் படுத்துவதற்கு ஒரு மண்டலத்தின் திறனுக்கு அதிகமான பளு.

overshoot alkalosis : மிகைக்கார நோய் : பைகார்பனேட்டை குளிகையாக விரைவாக உட்செலுத்துதல் காரணமாக,