பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/788

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

oxazepam

787

oxycel


சிறுநீர் வெளியேறுதல். இது வயிற்று மந்தத்துடன் (உணவு செரியாமை) தொடர்புடையது.

oxazepam : ஆக்சாஸ்பாம் : பென்சோடியாஸ்பாம் என்ற மென்மையான உறக்க மருந்து.

oxethazaine : ஆக்சித்தாசைன் : வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்தில் அடங்கியுள்ள உறுப்பெல்லை உணர்வு நீக்கி, உணவுக் குழாய் அழற்சி; நெஞ்செரிச்சல், பிளவுக் குடலிறக்கம் ஆகியவற்றின் மருத்துவத்தில் பயன்படுகிறது.

ox-eye : பெருங்கண்; அகல் விழி : கண்விழி விறைப்பு நோய்.

Oxford tube : ஆக்போர்ட் குழாய் : தலை கீழான ட-வடிவான குரல் வளை திறந்துள்ள ஒரு துளை. வாயிலிருந்து மூச்சுக் குழாய் வரையிலும் செலுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. தலை முழுவதுமாக வளைந் திருந்த போதிலும், இது கோட்ட முறுவதைத் தடுக்கிறது.

oxidant : ஆக்சிகரணப் பொருள் : ஒர் ஆக்சிகரணைப் பொருள். இது ஆக்சிஜனைக் கொண்டிருக்கும். அந்த ஆக்சிஜனை மிக எளிதாக வழங்கும்.

oxidase : ஆக்சிடேஸ் : ஆக்சிஜன் (உயிர்வாயு) உற்பத்தியை அதிகமாக்கும் ஒரு செரிமானப் பொருள் (என்சைம்) ஆக்சிஜன் ஏற்றும் நொதி.

oxidation : ஆக்சிகரணம்/உயிரக இணைவு; உயிர் வளியேற்றம்; உயிரியமாக்கல் : ஆக்சிஜனோடு இணையும் அல்லது ஆக்சிஜனேற்றம் நடைபெறும் நிலை, ஒர் அணுவில் நேர்மின்னேற்றங்கள் அதிகரிப்பதை அல்லது இரு ஹைட்ரஜன் அணுக்கள் குறைவதை அல்லது ஆக்சிஜன் இணைவதை இது குறிக்கும். ஆக்சிகரணம் ஏற்படும்போது, ஒர் ஏற்பு மூலக்கூறு குறையும். இது வளர்சிதை மாற்றத்தின் ஒரு பகுதி. இதனால் எரியாற்றலில் வெளிப்படுகிறது.

oximeter : ஆக்சிஜன்மானி : இதயத்திலிருந்து குருதி கொண்டு செல்லும் நாளமாகிய தமனியிலுள்ள இரத்தத்தில் ஆக்சிஜன் பூரிதமடைந்திருக்கிறதா என்பதை, அறிய காதுடன் இணைக்கப்படும் ஒரு கருவி.

oxprenoloi hydrochloride : ஆக்ஸ்பிரனோலால் ஹைடிரோ குளோரைடு : மட்டுமீறிய இரத்தக் கொதிப்பின்போது (மிகை இரத்த அழுத்தம்) பயன்படுத் தப்படும் மருந்து.

oxtriphyline : மூச்சுக் குழல் விரிவாக்க மருந்து : மூச்சுக் குழாய் விரிவாக்க மருந்தாகப் பயன்படும் ஒரு பொக்குள வழிப் பொருள்.

oxycel : ஆக்சிசெல் : ஆக்சிஜனேற்றிய உயிரணுப் பொருளின்