பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

adrenergiereceptors

78

adrenomyeloneuropathy


பாலான பரிவு நரம்புகள், குண்டிக்காய்ச் சுரப்பு அல்லாத இயக்குநீரை வெளியேற்றுகின்றன.

adrenergiereceptors : அண்ணீர் ஏற்பிகள்.

adrenocorticotrophic : அண்ணீரகப் புரணியூக்கி.

adrenocortical : அண்ணீரகப் புரணி சார்ந்த; அண்ணிரகப் புறணிச் சுரப்புக் குறைவு : அண்ணீரகப்புரணியில் சுரக்கின்ற இயக்குநீர்கள் குறை பாடு. இது அண்ணீரகச் சுரப்பியில் உண்டாகின்ற நோய் நிலையால் உருவாகிறது அல்லது முன் மூளையடிச் சுரப்பியிலிருந்து ஏ.சி.டி.எச். கிளர்மத் தூண்டல் சரிவர வராததால் இந்நிலைமை ஏற்படலாம்.

adrenocorticoid : அண்ணீரகப் புறணி இயக்குநீர் : அண்ணீரகப் புறணியில் தயாரிக்கப்படுகின்ற இயக்குநீர்.

adrenogenital syndrome : உட்சுரப்புக் கோளாறு; அண்ணீரகப் பாலுறுப்பு நோய்த் தொகுப்பு : குண்டிக்காய்ச் சுரப்பின் புறப் பகுதியின் இயல்புக்கு மீறிய நடவடிக்கையின் விளைவாகப் பிறவியிலேயே தோன்றும் ஒரு வகை உட்சுரப்புக் கோளாறு. இதனால் ஒரு பெண் குழந்தையிடம் விரிவடைந்த மகளிர் கந்தும், உதட்டு இதழ்கள் இணைந்தும் காணப்படலாம். அப்போது அந்தக் குழந்தையை ஆண் என்று தவறாகக் கருத இடம் ஏற்படும். ஆண் குழந்தையிடம் வெளிப்படையான மயிரும், விரிவடைந்த ஆண் குறியும் காணப்படும். ஆண் பெண் குழந்தைகள் இரண்டிலும் விரைவான வளர்ச்சியும், திண்ணிய தசைப் பற்றும் மிகுந்த எலும்பு முதிர்ச்சியும் காணப்படும்.

adrenogram : அண்ணீரக ஊடு கதிர்ப்படம்.

adrenoleucodistrophy : அண்ணீரக வெள்ளணு அழிப்பு.

adrenolytic : அண்ணீரகச் சிதைப்பி : (1) அண்ணீரகச் சுரப்பைக் கெடுக்கும் பொருள். (2) அண்ணீர் (அட்ரீனலின்) செயல் பாட்டைக் கெடுக்கும் அல்லது சிதைக்கும் பொருள். (3) அண்ணீரகச் சுரப்பு நீர் நரம்புகளின் செயலைச் சிதைக்கும் பொருள்.

adrenomegaly : அண்ணீர் பெருக்கம், அண்ணீர் வீக்கம் அண்ணீரகச் சுரப்பி, வீங்கி விடுதல் மிகை வளர்ச்சி.

adrenomyeloneuropathy : அண்ணீரக மூளை நரம்பு நோய் : இது ஒரு பரம்பரை நோய். இந்த நோயின்போது அண்ணீரகச் சுரப்பி சுருங்கிவிடும். அதன் சுரப்பு நீர் குறைந்து