பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/790

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

oximeter

789

oxytocin


இணைந்துள்ள ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி அளவிடுதல்.

oximeter : ஆக்சிஜன் மானி : குருதியிலுள்ள ஆக்சிஜன் செறிவளவை அளவிடவதற்குப் பயன்படும் ஒர் ஒளி-மின்னியல் சாதனம். இதில் ஒரு குறிப்பிட்ட அலை நீளங்களில் குருதி மீது ஒளி பாய்ச்சப்படுகிறது. பிரதிபலிக்கப்படும் அல்லது கடத்தப்படும் ஒளியின் அளவு அளவிடப்படுகிறது.

oxymon-2000 : நாடி அளவு கருவி : உடலின் நாடித் துடிப்பையும் ஆக்சிஜன் பற்றியும் அறிய உதவும் கருவி. அறுவை மருத்துவம் மூலம், அவசர மருத்துவப் பிரிவிலும் இது பயன்படுகிறது. மின் தடை ஏற்பட்டாலும் 2 மணி நேரம் வரை இதிலுள்ள மின்கலம் இயங்கும் நேரம், நாடித்துடிப்பு விகிதம் ஆகியவை அச்சாகி வெளிவரும். இதில் ஆட்காட்டி விரலை நுழைத்ததுமே அவரது நாடித்துடிப்பு அளவு படத்தில் தெரிந்துவிடும்.

oxypertine : ஆக்சிபெர்ட்டைன் : நரம்புக்கோளாறு, முரண் மூளை நோய் ஆகியவற்றில் பயன்படும் உறக்க மருந்து.

oxyphenbutazone : ஆக்சிஃபென்புட்டாசோன் : வீக்கத்தைத் தணித்து நோவகற்றக்கூடிய அல்லது மூட்டு வீக்கத்தைப் போக்கக் கூடிய ஒரு மருந்து. இது நச்சத் தன்மை யுடையதாகையால், ஒரு களிம்பாகப் பயன்படுத்தப்படுவது நீங்கலாக வேறெதற்கும் இப்போது பயன்படுத்தப்படுவதில்லை.

oxyspec : ஆக்சிஜன் குழாய்ச் சாதனம் : ஒர் ஆக்சிஜன் சாதனம். இதில் ஆக்சிஜன் குழாய், மூக்குக் கண்ணாடியின் ஒரு கனமான விளிம்புடைய சட்டகத்தில் மறைத்து வைக்கப் பட்டிருக்கும்.

oxytetracycline : ஆக்சிடெட்ரா சைக்ளின் : வாய்வழிக் கொடுக் கப்படும் ஓர் ஆற்றல் வாய்ந்த உயிர் எதிர்ப்பொருள். கடுமையான நோய்களின்போது நரம்பு வழி ஊசி மூலம் செலுத்தப் படுகிறது. இதை நீண்டகாலம் பயன்படுத்தினால் பல பின் விளைவுகள் உண்டாகக்கூடும்.

oxytocic : துரித மகப்பேற்று மருந்து; பேறு விரைவு மருந்து; கருப்பை ஊக்கி : கருப்பையைச் சுருங்கச் செய்து பிள்ளைப் பேற்றை விரைவுப் படுத்தக் கூடிய மருந்து.

oxytocin : ஆக்சிட்டோசின் : பின்புறக் கபச்சுரப்பு இயக்கு நீர்களில் (ஹார்மோன்) ஒன்று. பால் சுரப்பு நாளங்களில் தசையைச் சுருங்கச் செய்து, பால் சுரக்கும்படி செய்கிறது. சிண்டோசினான் என்ற கபச் சுரப்பு நீர்த்தயாரிப்பு, கருப்பையைச்