பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/791

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

oxyuris

790

ozone


சுருங்கச் செய்கிறது. எனவே, இது மகப்பேற்றுக்கப் பின்னர் ஏற்படும் குருதிக்கசிவை நிறத்தப் பயன்படுகிறது.

oxyuris : நூல்பூச்சி; நூல் புழு; கீரிப் பூச்சி : நீளுருளைப் புழு வகையில் ஒன்று. இது பொதுவாக நூல் புழு எனப்படும்.

ozone : ஓசோன்; கமழி; செறி உயிரக ஒதை '(o3)' : ஆக்சிஜனின் (பிராணவாயு) அணுத்திரிபு வடிவங்களில் ஒன்று. ஆற்றல் வாய்ந்த ஆக்சிகரணப் பண்புகளைக் கொண்டது. இதனால், நோய்க் கிருமி தடை மருந் தாகவும், தொற்றுத்தடை மருந்தாகவும், பயன்படுகிறது. இது நுரையீரல் மண்டலத்தில் எரிச்சலையும், நச்சுத்தன்மையையும் உண்டாக்கக்கூடியது.