பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/792

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



P

P : ப்பீ : இனக்கீற்றின் குறுங்கிளை, புரோட்டான், பிசோ ஆகியவற்றைக் குறிக்கும் குறியீடு.

P24 antigen : P24 விளைவியம் : எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான மனித ஏமக்குறை வைரஸின் டைப் 1 (HIV-1) உள்ளீடு விளைவியம்.

pacemaker : இதயத் துடுப்புச் சீரமைவுக் கருவி; இதய முடுக்கி; வேக மூட்டி : உடலில் ஒடும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, இரத்த ஒட்டத்தைச் சீர்படுத்துவது இதயம், இதயத்தில் மேலறைகள் இரண்டும், கீழறைகள் இரண்டும் உள்ளன. அசுத்த இரத்தம் முதலில் இடது மேலறைக்கு வந்து, அங்கிருந்து இடது கீழறைக்குச் சென்று, அங்கு அழுத்தப்பட்டு நுரையீரலுக்குச் சென்று, அங்கு ஆக்சிஜன் பெற்று தூய்மையடைகிறது. தூய்மையடைந்த இரத்தம் வலது மேலறைக்கு வந்து, அங்கிருந்து வலது கீழறைக்குச் சென்று அங்கு அழுத்தப்பட்டு மகாதமனி வழியாக உடலின் மற்றப் பகுதிகளுக்குச் செல்கிறது. மேலறைகளும், கீழறைகளும் சீரான ஒரே வேகத்தில் இயங்கும்போது இரத்த ஒட்டம் சீராக இருக்கும் வேகமே இதயத்துடிப்பு இந்த வேகத்தைச் சீர்படுத்த இதயத்தில் இயற்கையாகவே 'சினோட் ரியல் நோட்' (Sino-atrial node) என்ற அமைப்பு உள்ளது. நரம்பு உயிரணுக்களாலான இந்தச் சிறிய திசுப் பகுதி இதய இடது மேலறைச் சுவரில் இருக்கிறது. இதிலிருந்து எழும் துடிப்பு மேலறைகளும், கீழறைகளும் ஒரே சீராக இயங்க உதவுகிறது. இது சரியாக வேலை செய்யாதபோது, இதய இரத்த ஒட்டம் பாதித்து இதயக்கோளாறு ஏற்படுகிறது. இந்தக்கோளாறைச் சரிசெய்து இதயத் துடிப்பைச் சீராக்கு வதற்கு இந்தச் செயற்கைக் கருவி பொருத்தப்படுகிறது. இதில் லிதியம் அயோடினாலான மின்கலம் உள்ளது. இதன் எடை 40 கிராம் இருக்கும். மார்பில் இதயம் இருக்கும் பகுதியின்மீது சிறிய அறுவை மருத்துவம் செய்து, இக்கருவி தசைப்பகுதிக்குள் வைக்கப்படுகிறது. இதிலுள்ள மிக நுண்ணிய கம்பி (வயர்) இதயத் தசைப் பகுதியுடன் இணைக்கப்படுகிறது.