பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/796

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pain

795

palliation


pain : நோவு; வேதனை; வலி : ஒரு இடத்தில் ஊசி குத்துவது போன்ற அல்லது பரவலான மிதமான மிகவும் (தொந்தரவான) துன்பம் தரும் உணர்வு.

pained : நோவளிக்கும்.

Pain reliever : வலி குறைப்பி.

paried organs : இணை உறுப்புகள் : கண்கள், சிறுநீரகங்கள், பாலினச் சுரப்பிகள் மற்றும் நுரையீரல்கள் போன்ற உடலிலுள்ள இரண்டாக உள்ள உறுப்புகள்.

palate : அண்ணம் : மேல்வாய்ப் பகுதி.

palatine : அண்ணம் சார்ந்த; அண்ண : மேல்வாய் சார்ந்த.

palatine bones : அண்ண எலும்புகள் : பல்லண்ணத்தை உருவாக்கும் இரண்டு எலும்புகள்.

palatopharyngoplasty : அண்ணம்; தொண்டை சீர் அறுவை : மிகுந்து தொங்கும் சீதச்சவ்வை மெல் அண்ணம், தொண்டையிலிருந்து நீக்கும் அறுவை மருத்துவ முறை.

palatoplasty : அண்ணச்சீர் அறுவை : அண்ண, மறு சீரமைப்பு அறுவை மருத்துவம்.

palato quardrate : மேல்தாடை.

paleocerebellum : பரிணாம முன்நிலைச் சிறுமூளை : அசை வியக்கம், சமநிலை ஆகியவற்றோடு தொடர்புடைய தண்டுவட சிறுமூளை நரம்பிழைகளைக் கொண்ட சிறுமூளை அரைக் கோளத்தின் உட்பக்கப் பகுதியும் கொண்ட சிறமூளையின் உட்பகுதி.

paleocortex : பரிணாமமுன் நிலைப் புறணி : பெருமூளைப் புறணியின் மூச்சியக்கப் புறணிப் பகுதி.

paleopathology : பழைய நோயியல் : பழங்காலத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டு வரும் பிண உடல்களின் நோய் நிலைகளை ஆராய்தல்.

palfium : பால்ஃபியம் : டெக்ஸ் டிரோமோராமைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

palingenesis : மரபுப் பண்புருவாக்கம் : மூதாதையர் பண்புகள் மாற்றமடையாமல் அப்படியே உருவாதல்.

palinopsia : தூண்டல் நின்ற பிறகும் தொடர்ந்திருக்கும் பார்வையுணர்வு.

pallesthesia : ஒரு எலும்புத் துருத்தத்தின்மேல், ஒரு அதிரும் ஒலிக் கவட்டை வைப்பதால் உடலின்மேல் அல்லது உடலருகில் உண்டாகும் ஒலியதிர்வுகளை உணரும் திறன்.

palliation : கடுமைத் தணிப்பு : நோயின் கடுமையை மட்டுப் படுத்துதல்.