பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/797

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

palliative

796

pamergan


palliative : நோய்த் தணிப்பு மருந்து; வலி நீக்கி; நோய்க்குறி நீக்கல் : நோயை மட்டுப்படுத்த உதவும் மருந்து. இது நோயைத் தணிக்குமேயன்றிக் குணப்படுத்தாது.

pailidotomy : மூளை இணைப்பு இழை அறுவை : மூளைத் தண்டுவடப் புறணிக்கும் தனி வரிப்பள்ளத்திற்குமிடையிலான இணைப்பு இழைகளை அறுவை மருத்துவம் மூலம் துண்டித்தல். இது பார்க்கின்சன் நோயில் நடுக்கத்தைக் குறைக்கச் செய்யப்படுகிறது.

palm : உள்ளங்கை; அங்கை : அங்கை வரை மூடும் கையுறை, அங்கை அகலம் ஏறத்தாழ 10 செ.மீ. உள்ளங்கை நீளம் ஏறத்தாழ 20 செ.மீ.

palmar : உள்ளங்கை சார்ந்த : அங்கைய உள்ளங்கையிலுள்ள.

palmate (palmated) : உள்ளங்கை வடிவான : உள்ளங்கை வடிவில் உள்ள.

palmitic acid : பால்மிட்டிக் அமிலம் : பெரும்பாலான எண் ணெய்களிலும், கொழுப்புகளிலும் காணப்படும் ஒரு 16 கரிய செறிவுக் கொழுப்பமிலம்.

palpable : தொட்டுணரக்கூடிய; தொட்டறியும்; தொட்டுணர் : புலன்களால் எளிதில் உணரத்தக்க உள்ளத்தால் அறியக்கூடிய.

palpation : கைச் சோதனை; தொட்டறிதல்; தொட்டுணர்தல்; தொட்டாய்தல் : மருத்துவத்தில் கையால் தொட்டுப் பரிசோதனை செய்தல்.

palpebra : கண்ணிமை; இமைகள்.

palpebra : கண்ணிமை சார்ந்த; இமைக்கண் சவ்வு : கண்ணி மைக்குரிய.

palpitation : நெஞ்சுத் துடிப்பு; மார்புப் படபடப்பு : கடுமுழைப்பு, நோய் கவலை காரணமாக ஏற்படும் அளவுக்கு மீறிய நெஞ்சுத் துடிப்பு.

paisy : முடக்குவாதம்; வாதம் : உடல் உறுப்புகள் முழுதும் செயலற்றுப்போதல், உணர்வு கெடுதல்.

paludrine : பாலூட்ரின் : புரோகுவானில் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

pamaquin : பாமாக்குவின் : முறைக்காய்ச்சல் (மலேரியா) நோய்க்கு எதிராகப் பயன் படுத்தப்படும் ஒரு செயற்கை மருந்து இது கொய்னாவுடன் அல்லது குளோக்குவினுடன் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது.

pamergan : பாமர்கள் : பெத்திடின் புரோமெத்தாசின் இரண்டும்