பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/800

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pancuronium

799

panhysterosa..


pancuronium : தசைத் தளர்த்தி : மயக்கம் கொடுக்கும்போது துணை செய்யப் பயன்படுத்தப் படும் இயக்குதசை தளர்விக்கும் மருந்து.

pancystitis : முழுப்பையழற்சி : சிறுநீர்ப் பையின் சுவர் முழுவதையும் பாதித்துள்ள அழற்சி.

pancytopaenia : குருதி அணுக்குறை; முழு உயிரணுக்குறை : இரத்தத்தில் சிவப்பணுக்கள், துகள் வெள்ளணுக்கள், தட்டணுக்கள் குறைவாக இருக்கும் நிலை. எலும்பு மச்சையின் செயற்பாடு மட்டுப்படுத்தப் படும்போது இது உண்டாகிறது.

pandemic : பெருங்கொள்ளை நோய்; பகுதி முழுவதும் பரவு நோய்; பாரிய நோய் : ஒரு நாடு முழுவதும் அல்லது உலகம் முழுவதும் பரவும் பெருங்கொள்ளை நோய்.

Pandy's test : பேன்டியின் சோதனை : ஹங்கேரி நாட்டு மனநல மருத்துவர் கால்மேன் பேன்டியின் பெயரிடப்பட்ட இச்சோதனையில், மூளை தண்டுவட நீரிலுள்ள குளாபு லின் புரதமிருப்பதை, 7% ஃபீனால் சேர்ப்பதால் ஏற்படும் கலங்கல் நிலையால் அறிவது.

panencephalitis : முழுமூளையழற்சி : மூளையின் சாம்பற் பொருள், வெண்பொருள் இரண்டின் பாதிப்பால் ஏற்படும் மூளையழற்சி.

panendoscopy : முழுப்பகுதி அக நோக்கி : உணவுக்குழல், இரைப்பை, முழு சிறுகுடல் எல்லாவற்றையும் ஒரு தடவை சோதனையின்போதே இழைக் காட்சி அகநோக்கியால் காணுதல்.

Paneth's cells : பேனெத் அணுக்கள் : ஜெர்மானிய மருத்துவர் ஜோசஃப் பேனெத்தின் பெயரைப் பெற்ற, சிறுகுடல் குழல் சுரப்பிகளின் புறத்தோலிய இழைமத்திலுள்ள இயோசின் நிறத் துணுக்குகளைக் கொண்ட பெரும் அணுக்கள்.

panhypopituitarism : முழுப் பிட்யூட்டரிக்குறை சுரப்பி : முன் பகுதிப்பிட்யூட்டரி சுரப்பின் அழிவால், எல்லா முன் பிட்யூட்டரிச் சுரப்பிகள் இல்லாமல் போவது அல்லது குறைவாக இருக்கும் ஒரு நிலை.

panhysterectomy : முழுக்கருப்பை நீக்கம் : கழுத்துப் பகுதியும் சேர்த்துக் கருப்பை முழுவதையும் அறுத்து நீக்குதல்.

panhysterosaipingectomy : முழு கருப்பை; கருப்பைக்குழல் அறுவை நீக்கம் : கருப்பை, கருப்பைக் கழுத்து மற்றும் கருப்பைக் குழல் அனைத்தையும் அறுத்து நீக்குதல்.