பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/803

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

paraaminobenzoic acid

802

paracodol


paraaminobenzoic acid : பாராமினோபென்சாயிக் அமிலம் : சூரிய ஒளியிலிருந்து புறவூதாக் கதிர்களை வடிகட்டும் அமிலம். இது களிம்பு அல்லது கழுவு நீர்ம வடிவிலும் கிடைக்கிறது; இது வெயிலிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.

paraaminosalicylic acid (PAS) : பாராமினோசாலிசிலிக் அமிலம் : காசநோய்க்கு எதிராகப் பயன் படுத்தப்படும் மருந்து ஐசோனியாசிட் அல்லது ஸ்டிரப்டோமைசின் மருந்துடன் சேர்த்துக்கொடுக்கப்படுகிறது.

paraanaesthesia : கீழுடம்பு உணர்விழப்பு : உடம்பின் கீழ்ப்பகுதி உணர்விழப்பு.

paraaortic : பெருந்தமனி அருகிலுள்ள : இதயத்திற்கு இடது மேலறையிலிருந்து புறப்படும் பெருந்தமனி என்ற இரத்தக் குழாயின் அருகில் இருப்பது.

paraaortic body : மகாதமனிப் பக்க மெய்மம் : வயிற்றுமகா தமனிப்பக்கத்தில் அமைந்து உள்ள சிறு குரோமேட்டின் திசுத்திரள்களில் ஒன்று.

parabiosis : பர உயிர் இரட்டைகள் : 1. ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல் இரு உயிர்கள் ஒன்றிணைதல், 2. கடத்து திறனும் கிளர்திறனும் தற்காலிகமாக தடைப்பட்டு இருத்தல்.

paracentesis : வடிதுளையிடல் : உடற்குழிவறை ஒன்றை வெளி யிலிருந்து ஒரு ஊசியால் அல்லது ஒரு துளைக்கும் கருவியால் துளைத்து உள்ளிருக்கும் நீரை, நோயறிவதற்காக அல்லது மருத்துவத்துக்காக வெளியி லெடுக்கும் முறை.

paracetamol : பாராசிட்டாமோல் : ஒரு மென்மையான நோவகற்றும் மருந்து. இது வீக்கத்தைக் குறைப்பதில்லை. முடக்கு வாதங்களுக்கு இது பயன்படாது. இதனை அதிக அளவில் உட்கொண்டால் நுரையீரலுக்குக் கடுஞ்சேதம் விளையும்.

parachute mitral valve : வான்குடையுகு ஈரிதழ் தடுக்கிதழ் (வால்வு) : ஈரிதழ் வால்வின் இரு சிற்றிதழ்களின் தசை நாரிழைகள் இடது இதயக் கீழறையின் காம்புருத்த தசைகளில் செருகியிருப்பதால் குருதியோட்டத் துக்குத் தடை ஏற்படுத்தல்.

paraclinical : மருத்துவம் சார்ந்த மருந்தியல் : நோய்க்குறியியல், நுண்ணுயிரியல், சட்ட மருத்துவயியல் போன்ற ஒரு மருத்துவப் படிப்புக் காலத்தில் பாதி நிலையில் படிக்கும் பாடங்கள்.

paracodo : பாராக்கோடால் : கோடைன் கலந்த பாராசிட்