பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/804

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

paradigm

803

paragonimus


டோமால் என்ற கரையக்கூடிய மாத்திரைகளின் வணிகப்பெயர்.

paradigm : கருத்துரு நிலை : கருத்துரு விளக்கக் கொள்கையை ஒத்திசையும் தரவுகள் சேர்வதால், ஒரு குறிப்பிட்ட உயிர்வேதியியல் தத்துவத்தின் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும் விளக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்படுதல்.

paradoxical sleep : கனவு உறக்கம் : உறங்கும் நேரத்தின்போது விரைவான கண்ணசைவுகள் ஏற்படும்; அப்போது கனவுகள் உண்டாகின்றன.

paraesthesia : மிகை ஊறுணர்வு : மட்டுமீறிய தொடு உணர்வு.

paraffin : நிலமெழுகு கன்மெழுகு : களிமண்ணுடன் கல்லெண் ணெயைக் கலந்து கிடைக்கும் மெழுகு. திரவ நில மெழுகு பேதி மருந்தாகப் பயன்படுகிறது. வெண்ணிறமான மென் நிலமெழுகு களிம்பு மருந்தாகப் பயன்படுகிறது. திண்ணிய நிலமெழுகு வாதங்களுக்குப் பூச்சி மருந்தாகப் பயன்படுகிறது. நிலமெழுகு எண்ணெய் விளக்கு எரிக்கவும், மசகுப் பொருளாகவும் பயன்படுகிறது.

paraffinoma : மெழுகுருக்கட்டி : தொடர்ந்து மெழுகு படிவதால் உண்டாகும். (குருளை) திசுக் கட்டி.

paraformaldehyde : பாராஃபார் மல்டிஹைட் : இறந்தவர் உடற் குழாய்களில் இருக்கும் சிறு குழல்களில் நோய் நுண்மம் நீக்கவும், அறைகளை தொற்றுத் தடை நீக்கம் செய்யவும் பயன்படும் திடபொருள்.

paragesic : பாராஜெசிக் : நோவகற்றும் ஒரு கலவைப் பொருளின் வணிகப் பெயர். இது, வலியுண்டாக்கும் மேல் மூச்சடைப்புக்குப் பயன்படுகிறது.

paragonimiasis : பாராகோனி மஸ்மொய்ப்பு : பாராகோனிமஸ் இனம் சார்ந்த ஒட்டுண்ணிப் புழுத்தாக்கம். நுரையீரலில் வெஸ்டர்மனை தாக்கத்தால் ஏற்படும் நீர்க்கட்டிகளால் கோழையில் குருதி வெளியாவதோடு விரல் முனைகள் தடித்தல், கல்லீரலும் மூளையும் பாதிக்கப்படலாம். மருத்துவம் செய்ய பிரேசிகுவிண்டால் மருந்து தரப்படுகிறது.

paragonimus : பேராகோனிமஸ் : நுரையீரல் வாழும் ஒட்டுண்ணிக் கொக்கிப் புழுக்கள் இனத்தில் அதிகமாகக் காணப்படுவது பேராகோனிமஸ் பெஸ்டெர்மனை என்னும் இனமாகும். அவற்றின் முட்டைகள் இருமல் சளி அல்லது மலத்தின்