பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/806

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

paramedian

805

paraneoplastic


paramedian : மையம் சார்ந்த; மையத்தருகில் : மையப்பகுதி அருகிலுள்ள.

paramedian incision : நடுக்கோட்டுப் பக்கக்கீறல் : வயிற்று நடுக்கோட்டிலிருந்து 1-2.5 செ.மீ. தள்ளி செங்குத்தாகக்கீறி, நேர்த்தசையை வெளிப்பக்கம் தள்ளி வைத்தல்.

paramedic : துணைமருத்துவப் பணியாளர் : ஒரு விபத்திற்குப் பின் அவசர மருத்துவ கவனிப்பு அளித்து உயிர் மீட்கும் பயிற்சி பெற்ற ஆள்.

paramedical : மருத்துவஞ்சார் தொழில்; மருத்துவ உதவியாளர் : மருத்துவத் தொழிலுடன் தொடர்புடைய தொழில் முறைப் பயிற்சி, உடற்பயிற்சி, பேச்சுப் பயிற்சி, மருத்துவச் சமூகத்தொண்டு ஆகியவை இவ்வகையின.

paramenstruum : மாதவிடாய்க் காலம் : மாதவிடாய் தொடங்குவதற்கு முந்திய நான்கு நாட்களும் மாதவிடாயின் முதல் நான்கு நாட்களும் மாதவிடாய் காலம் எனப்படும்.

parametrium : கருப்பை இணைப்புத்திசு; கருப்பைப் பக்கம் : கருக் பையைச் சுற்றியுள்ள இணைப்புத் திசுக்கள்.

paramo : பாராமோல் : பாராசிட்டாமோல், டைஹைடிரோக் கோடைன் இரண்டும் கலந்த கலவை மருந்தின் வணிகப் பெயர் இலேசான வலியைக் கட்டுப்படுத்த வாய்வழி உட்கொள்ளப்படுகிறது.

paramucin : பேராம்யூசின் : முட்டைப்பை நீர்க்கட்டியிலும் மற்ற நீர்க்கட்டிகளிலும் காணப்படும் பழச்சீனிப் புரதம். அது நீரில் கரைவதில்லை. ஆனால் டேன்னின் சேர்த்தால் அடியில் படிகிறது.

parmyxoviridae : பேராமிக்ஸோ மாநச்சுயிர்கள் : பேராமிக்ஸோமா நச்சுயிர், மார்பிலி நச்சுயிர், நியூமோ நச்சுயிர் போன்ற இனங்களை உள்ளடக்கிய ஆர்.என்.ஏ. நச்சுயிர் குடும்பம்.

paramyxovirus : பேராமிக்ஸோ நச்சுயிர் : மூச்சுப் பாதைத் தொற்றுகள், தட்டம்மை, புட்டாலம்மை ஆகிய நோய்களை உண்டாக்கும் பேராமிக்ஸோ நச்சுயிர் குடும்பத்தைச் சேர்ந்த ஓரின நச்சுயிர்.

paranasal : மூக்குக்குழி அருகில்; மூக்கருகில்; நாசிப்பக்கம்.

paraneoplastic : பரபுற்றுநிலை : ஒரு கட்டி அல்லது அதன் சேய்மப் பரவல் திரளிலிருந்து தூரத்தில் திசுக்களில் உண்டாகும் மாற்றங்கள்.