பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/807

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

paranephritis

806

paraprotein


paranephritis : சிறுநீரகப் பக்கத் திசுவழற்சி : 1. சிறுநீரகத்தைச் சுற்றியுள்ள இணைத்திசு அழற்சி 2. அண்ணீரகச் சுரப்பி அழற்சி.

paramoia : திரிபுணர்வு; கருத்துத் திரிபுநோய்; துன்புறு மனநோய் : அறிவுப் பிறழ்ச்சியும், தருக்கியல் சித்தப்பிரமையும் ஏற்படும் ஒருவகை மனக்கோளாறு.

paranoid behaviour : ஐயுறவு நடத்தை : மற்றவர்கள் மீது ஐயுறவு கொள்ளும் செயல்கள்.

paranoid personality : அறிவு பிறழ் ஆன்மை : ஐயப்பாட்டு மிகுஉணர்வு அல்லது வலியத் தாக்கும் இயல்புடைய ஒருவர்.

paranoidschizophrenia : ஐயுறவு முரண் மூளை நோய் : மருட்சியும், மாயக்காட்சிகளும் அடிக்கடி ஏற்படும் ஒருவகை முரண்மூளை நோய்.

paranomia : பெயர்மறதி : பார்க்கும் பொருள்களின் சரியான பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியாத பேச்சு முறை கோளாறு.

paranychia : நக அழற்சி (விரல்சுற்றி) நகச்சுற்று; நகத்தடி சீழ்க்கட்டி : விரல் நகத்தைச் சுற்றி ஏற்படும் வீக்கம். இது பாக்டீரியாவினால் அல்லது பூஞ்சணத்தினால் உண்டாகிறது.

paraoesphageal : உணவுக் குழாய் அருகில் : உண்குழல் பக்கம்.

parapertusis : பரிவுக் கக்குவான் : கடுமையில்லாத கக்குவான் இருமல் நோய்.

paraphimosis : ஆண்குறிமுகை சுருக்கழுத்தம் : இறுக்கமான நுனித்தோலை பின்னிழுக்கும் போது ஆண்குறிமுகை சுருக்கழுத்தப்பட்டு வீக்கமும் வலியும் ஏற்படுகிறது.

paraphrenia : மருட்சிநோய் : முதியவர்களுக்கு உண்டாகும் ஒருவகை உளவியல் நோய். இதனால் ஒருவித மாயத்தோற்றம் (மருட்சி) பொதுவாகத் தான் விடாது உறுத்தப்படுவதாக ஒரு மருட்சி ஏற்படும்.

paraplasm : பரகணியம் : 1. பிறழ் வளர்ச்சி. 2 ஒரு உயிரணுவின் முன்கணியம் (உயிர்க்கூழ்மம்).

paraplegia : கீழ் உறுப்புப் பக்க வாதம்; உடல் கீழ்பாதிவாதம்; கீழங்க வாதம் : உடலின் கீழ்ப் பகுதி உறுப்புகளில், குறிப்பாக மலக்குடல், சிறுநீர்ப்பை போன்றவற்றில் ஏற்படும் பக்கவாத நோய்.

parapraxia : பரபிராக்சியா : பொருள்களை இடம் மாற்றி வைத்தால், சொல் பிறழ்ச்சி போன்ற பொருளுள்ள செயல்களை சரியில்லாமல் செய்தல்.

paraprotein : பரபுரதம் : இயல்பான பகுதியாயில்லாத, நோய்