பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/808

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

paraproteinaemia

807

paraspadias


நிலையில் இரத்தம் அல்லது சிறுநீரில் பெருமளவில் காணப்படும் பலவகை புரதங்கள்.

paraproteinaemia : பரபுரதக் குருதிமை : குருதிச்சீர் அணு நோய்களில் இரத்தத்தில் காணப்படும் இயல்பல்லாப் புரதங்கள்.

parapsoriasis : பரசெந்தடிப்பு : அவ்வப்போது பெரிதாகும் தழும்பில் நிலைபெற்ற நாள் பட்ட கரும்புள்ளி கொப்புளமாக செதிளான செந்தடிப்பு.

parapsycholgy : புலனுணர்வியல் : புலனுணர்வு கடந்த நோக்கு. தொலைவிலுணர்தல் போன்ற உளவியல் நிகழ்வுகள் பற்றி ஆராய்தல், புற உளவியல் துறை.

paraquat : பராக்குவாட் : ஒரு வகைப் புழுக்கொல்லி மருந்து. இதனை உட்கொண்டால், கால தாமதமாக நுரையீரல் ஈரற் குலை, சிறுநீரகம் ஆகியவற்றில் நச்சுத் தன்மை உண்டாகும். இதனால் படிப்படியாக நுரையீரல் காய்ச்சல் (நிமோனியா) ஏற்பட்டு மரணம் விளையலாம்.

pararectal : மலக்குடல் அருகில்.

parasitaemia : குருதி ஒட்டுண்ணி; ஒண்டுண்ணியம் : குருதியில் பரவி ஒட்டுண்ணிகள் நிறைந்திருத்தல்.

parasite : ஒட்டுண்ணி : மற்றொரு தாய் உயிரியிடமிருந்து உணவை உறிஞ்சிவாழும் ஒர் ஒட்டுயிரி.

parasitic diseases : ஒட்டுண்ணி நோய்கள் : ஒட்டுண்ணி உயிரி களினால் உண்டாகும் நோய்கள்.

parasitic foetus : ஒட்டுயிர் முதிர்கரு : இரட்டைக் குழந்தை முதிர் கருக்களில் ஒன்றில் இதயம் உருவாகாமல் இயல்பான இரட்டைகளில் ஒன்றின் இரத்த சுழற்சியைக் கொண்டு உயிர் தரித்திருப்பது.

parasiticide : ஒட்டுயிர்க்கொல்லி; ஒட்டுண்ணிக் கொல்லி; ஒட்டுமுறி : ஒட்டுண்ணி உயிர்களைக் கொல்லும் மருந்து.

parasuicide : போலித் தற்கொலை : தற்கொலை செய்து கொள்ளப் போதுவதுபோல் போலியாக நடித்தல், மன நோயாளிகளாக இல்லாத ஆனால் மன உளைச்சலுக்கு ஆட்பட்ட இளைஞர்கள் இவ்வாறு செய்கிறார்கள்.

parasitism : ஒட்டுயிர் தாக்கம் : 1. ஒரு ஒட்டுயிர் மொய்ப்பு. 2. ஒம்பும் உயிரிடமிருந்து ஒட்டு உயிர் பலன் பெற்று இரு உயிர்களும் ஒன்றாக வாழும் உறவு நிலை.

paraspadias : ஆண்குறிப் பக்கத் துளையமைவு : சிறுநீர்த் தாரை