பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/810

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

parathyrotropic

809

parenchyma


பட்டவற்றை அறுவை மருத்துவம் மூலம் வெட்டியெடுத்தல்.

parathyrotropic : பராதைராயிடு நூண்ம : பராதைராய்டு சுரப்பியைத் தூண்டும் (இயக்குநீர்).

paratope : பரபகுதி : எதிர் ஊக்கியோடு ஒட்டிக்கொள்ளும் எதிர்ப்பொருள் பகுதி.

paratracheal : மூச்சுக்குழாய் அருகில் : குரல்வளை அருகில்.

paratuberculosis : பரடியூபர் குளோசிஸ் : மைகோ பேக்டீரியம் டியூபர்குலோசிஸ் கிருமியால் அல்லாது உண்டாகும் டியூபர்குலோசிஸ் போன்ற நோய்.

paratyphoid : பரடைஃபாயிடு : சால்மொனெல்லா பாராடைஃபை 'ஏ' மற்றும் 'பி' கிருமிகளால் உண்டாகும் டைபாயிடு நோயின் மிதமான வகை.

paratyphoid fever : இளைக் குடற்காய்ச்சல் : குடற்காய்ச்சல் (டைஃபாய்டு) போன்ற ஒரு காய்ச்சல் நோய். இது குடற்காய்ச்சலைவிடக் கடுமை குறைந்தது; இதன் கால நீட்சியும் குறைவு. ஒரு வகை "சால்மோனெல்லா" என்ற நோய்க் கிருமியினால் உண்டாகிறது.

paraurethral : சிறுநீர்ப்புறவழி அருகில் : மூத்திர ஒழுக்குக் குழாய் அருகில்.

paravaccinia : பேராவாக்சினியா நோய் : பசுக்களின் பால் மடியை பாதிக்கும் பேராவாக்சினியா வைரஸ் நோய்.

paravaginitis : யோனிப்பக்கத்திசு அழற்சி : யோனியின் பக்கங் களிலுள்ள திசுக்களின் அழற்சி.

paravaginal : யோனிக்குழய் அருகில்; அல்குல் அருகில் : பெண்ணின் கருப்பை வாய்க் குழாயின் அருகில்.

paravertebral : தண்டுவடம் அருகில்; முள்ளெலும்புக்கருகில் : முதுகந்தண்டின் அருகில்.

paragoric (paragoric elixir) : சூட ஆபினித் தைலம் : சூடன், சோம்பு, சாம்பிராணி மணங்கள் ஊட்டபட்டு அபினி கரைந்த சாராயத்தினலான நோவகற்றும் மருந்து. பழைய காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது.

pareira : சிறுநீர் வேர் மருந்து : சிறு நீர்க்கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படும் பிரேசில் நாட்டு வேர்ச்சரக்கு மருந்து.

parenchyma : சோற்றுத்திசு : சுரப்பிக் கருப்பொருள், ஒர் உறுப்பின் கருப்பொருள் அணுக்கள்.