பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/815

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

past pointing

814

patent ductus arteriosis


உள்ள கிருமிகளைக் கொன்று தூய்மை செய்தல்.

past pointing : குறிதாண்டித் தவறல் : சிறுமூளை நோய் நிலைகளில் தூரத்தைக் கணிப்பதில் தவறுவதால் இலக்கைத் தவறவிடல்.

patau's syndrome : பட்டாவு (நோயியம்) நோய்த்தொகுதி : பிளவுதடு, பிளவண்ணம் விரல் மிகுதி, சிறுதலை, பிறவி இதய நோய் ஆகியவற்றை உண்டாக்கும் டிரைசோமி 13 எனும் மரபணுக்கோளாறு.

patella : கால்மூட்டெலும்பு; சில்லெலும்பு; சில்லு; முழங்காற்சில் : முழந்தாள் முட்டுச் சில்லு, இது முக்கோணவடிவ எலும்பினாலானது.

patellar : கால்மூட்டுச் சில்லுக் குரிய.

paternity testing : தந்தைமைச் சோதனை : ஒரு குறிப்பிட்டமனிதர், ஒரு குறிப்பிட்ட குழந்தையின் தந்தையா அல்லவா எனக் கண்டறிய டி.என்.ஏ. வரை உருப்பதிவைப் பயன்படுத்தல்.

patches : திட்டுகள்.

patch test : திட்டு சோதனை; பசைப் பட்டைச் சோதனை : தோளில் ஒட்டப்படும் பசைப் பட்டையினால் எதிர்வினை ஏதேனும் ஏற்படுகிறதா என்பதைக் கண்டறிவதற்காக நடத்தப்படும் தோல் சோதனை. சிவப்பு நிறமும், வீக்கமும் ஏற்படுமானால் ஒவ்வாமை உள்ளது என அறியலாம்.

patella : கால் மூட்டெலும்பு : முழந்தாள் மூட்டுச்சில்லு.

patellectomy : மூட்டுச்சில்லு அறுவை; சில்லெடுப்பு : மூட்டுச் சில்லை அகற்றுவதற்கான அறுவை மருத்துவம்.

patent : திறந்த : வெளிப்படையான, மேலீடாகத் தெரிகிற.

patent ductus arteriosus : திறந்த இதயத் துளை : குழந்தை