பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/816

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

paternai causes

815

pathophysiology


பிறந்த பின்பு, இதயத்தின் இடது அறைகளுக்கும், வலது அறை களுக்குமிடையிலான தொடர்பு வழி முடிக்கொள்ளத் தவறுவதால் இதயத்துளை ஏற்படுகிறது. இதனால் தூய இரத்தமும் கெட்ட இரத்தமும் ஒன்றாகக் கலந்து பல நோய்கள் உண்டாகின்றன. இதயத்தினுள் ஒர் இறங்கு குழாயைச் செலுத்தி, அதன் வழியே ஒர் இரட்டைக் குடை சவ்விசைச் செருகி இத்துளையை அடைக்கலாம்.

paternal causes : தந்தைவழிக் காரணங்கள் : கருச்சிதைவுக்கான தந்தைவழிக் காரணங்கள்.

pathfinder : வழிகாண் கருவி : ஒரு குறுகிய சுருக்குப் புழை வழியாக உள் செலுத்தப்படும் ஒரு இழையுரு விரிப்பான். ஒரு பெரிய நுண்குழல் அல்லது உலோக விரிப்பானை செலுத்துவதற்கு அது வழிகாட்டியாய் உதவுகிறது.

pathobiology : நோய்க்குறி உயிரியல் : உயிரியல் செய்திகளை முன்னிலைப்படுத்தும் நோய்க் குறியியல்.

pathogen : பிணி யூக்கி; நோயுண்டாக்கும் நுண்ணுயிர்; நோயணு : நோய் தோற்றுவிக்கிற ஒரு பொருள். பொதுவாக, இது உயிருள்ள ஓர் உயிரியைக் குறிக்கும்.

pathogenesis (pathogeny) : நோய்த் தோற்ற முறை : நோய் தோன்றி, வளரும் முறை.

pathogenetic : நோயுண்டாக்கும்; நோய் உருவாக்கும்.

pathgenicity : நோயுண்டாக்கும் திறன் : நோயைத் தோற்றுவிக்கும் திறம்பாடு.

pathognomonic : நோய்ப்பண்பு; நோய் அறிவுறுத்து : நோய் இன்னதென்று காட்டுகின்ற தனிப்பண்பு.

pathognomy : உணர்ச்சி ஆய்வியல்.

pathologist : நோய்க்குறி ஆய்வாளர்; நோயறி வல்லுநர்; நோய்க் குறியியல் வல்லுநர்.

pathology : நோய்க் குறியியல்; நோயியல்; நோய்க்கூறு இயல் : நோய்க்கான காரணம், அதன் தன்மை பற்றி ஆராயும் அறிவியல்.

pathological fracture : நோய்வடைந்த எலும்பு முறிவு.

pathophobia : நோயச்சம்; நோய் மருட்சி : நோய் பற்றி அச்சங் கொள்ளும் ஒரு மன நோய்.

pathopsychology : மனநோய் குணஇயல் : மனநோயின் மனவியல்.

pathophysiology : இயல்பிலா உடலியல் : மனிதரின் இயல்பு மீறிய செயல்முறைகள் குறித்து ஆராயும் அறிவியல்.