பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/818

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

peaud's orange

817

pelizaeus Merz


peaud's orange : மார்பகத் தோல்; மார்பகத் தோல் புற்று : கடுமையான வீக்கம் அல்லது கடும் பிளவை ஏற்படும்போது மார்பகத்தின் மீது தோல் தோன்றுதல், நிணநீர் இழைம அழற்சியினால் முடியின் புழை வாய்கள் குழிகளாகத்தோன்றும்.

pecten : சீப்புரு : சீப்புப் போன்ற துருத்தங்களை அல்லது முனை களைக்கொண்ட ஒரு அமைப்பு.

pectin : பெக்டின் : ஆப்பிள் பழச்சதை அல்லத எலுமிச்சம் பழங்களின் தோலிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பழச் சர்க்கரை அமிலங்களின் பல்சேர்மம்.

pectoral : மார்பகம் சார்ந்த; மார்புடைய; நெஞ்சுசார் : நெஞ்சுக்குரிய, மார்பக நோய்க்குக் குணம் அளிக்கிற.

pectorilequy : மார்புக்குரலொலி : குரல் எதிரொலி மிகுந்து மார்பு அமைப்புகளின் வழியாகச் சென்று குரலொலியாகக் கேட்கப்படுதல்.

pectus : மார்பறை : மார்பக முன்சுவர்.

pedal : பாதம் சார்ந்த; காலடி : காலடி உறுப்பு சார்ந்த.

pederasty : பையன்பால் வேட்கை : சிறு பையன்களில் மலப்புழை வழியாக உடலுறவு கொள்ளுதல்.

pedice : காம்புச் சிறுகிளை : 1. காலடிமுனை, காலடித் தட்டு துணைமை. 2. காலணுவின் (ஆள்நிற்கும்மேடை) துருத்தம்.

pedicellation : காம்புருவாக்கம் : சிறுகாம்பு அல்லது காம்பு உருவாக்கம்.

pedicle : சிறுகாம்பு மயிர்க்கால்; வேருரு : சுற்றுப்புறக் கட்ட மைவுகளுடன் ஒரு கட்டியை இணைக்கும் குறுகிய உறுப்பு.

pedicular : பேன் சார்ந்த : 1. காம்பு சார்ந்த, 2. பேன் சார்ந்த.

pediculation : பேன் தொற்று : 1. காம்பு உருவாகும் வழிமுறை. 2. பேன்தாக்கம்.

pediculicide : பேன் கொல்லி : 1. பேன் ஒழித்தல். 2. பேன் கொல்லும் பொருள்.

pediculosis : பேன் நோய் : பேன்கள் மலிந்து உண்டாகும் நோய்.

pediculus : ஒட்டுண்ணிப் பேன்; சீலைப்பேன் : நோய்களைப் பரப்பும் முக்கியமான ஒட்டுண்ணிப் பேன் இனம்.

peeling : தோலுரிதல்.

pelizaeus Merzbacher disease : மரபு நலிவு நோய் : உளவியல் கோளாறுடன் தொடர்புடைய ஒரு மரபு வழி நலிவு நோய்.