பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/819

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

peilagra

818

pelvic peritoneum


pellagra : தோல் வெடிப்பு நோய்; தோல் வரட்சி; வரட்டுத்தோல் : வைட்டமின்-பி தொகுதி, புரதம் போன்ற ஊட்டச்சத்துக் குறைவினால் உண்டாகி, இறுதியில் மூளைக்கோளாறில் கொண்டு விடக்கூடும் தோல் வெடிப்பு நோய்,

pellet : குளிகை; வில்லை; கவளம்; நீர்வில்லை : சிறிய மாத்திரை.

pellicle : தோல்சவ்வு; மென்தோல் படலம் : 1. தோலின் ஒருமென் தண்டு. 2. நீர்மங்களின் பரப்பி லுள்ள மென்படலம்.

pelvicalyceal : வட்டில்புல்லிசார் : சிறு நீரக வட்டில்கள், புல்லிகள் சார்ந்த.

pelvic cavity : இடுப்புக்குழி.

pelvicephalometry : இடுப்புக் கூடு தலையளவு : தாயின் இடுப்புக் கூட்டுக்கும் முதிர் கருத்தலைக்கும் உள்ள பொருத்த அளவு.

pelvic deformity : இடுப்புக்குழி குறைவு.

pelvic diaphra : இடுப்புக்குழி விதானம்.

pelvic fascia : இடுப்புக்குழி மென்படலம்.

pelvic fin : இடுப்பெலும்பு.

pelvic floor : இடுப்புக்குழித்தளம் : மேலேயுள்ள இடுப்புக் குழிக்கும், கீழேயுள்ள பெண் உறுப்புக்கும் இடைப்பட்ட பகுதிக்கு மிடையிலான ஒரு தசைப் பிரிவினை. இந்தத் தசை நலிவடையுமானால் சிறுநீர் அடக்க முடி யாமை, கருப்பை நெகிழ்வு உண்டாகும் இழுப்பறை ஆதாரத்தசை.

pelvic girdle : இடுப்புக்குழி வளையம்; இடுப்பு வளையம்; இடுப்புக் கூட்டு வளையம் : இடுப்புக்குழி இணைப்பெலும்பு (புனிதஎலும்பு), வால்பக்க முதுகெலும்பு என்ற இரு இடுப்பெலும்புகள் அடங்கிய இடுப் புக்குழி எலும்புக்கூடு.

pelvic infection : கருப்பைத்தொற்று.

pelvic pain syndrome (PPS) : இடுப்புக்குழி நோவு : பெண்களின் இடுப்புக் குழியில் ஏற்படும் வலி. இதற்கான நோயியல் காரணம் தெரியவில்லை. அதனால் இதைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சை இல்லை நோயின் தீவிரத்தைத் தணிக்க வலி நிவாரண மருந்துண்டு.

pelvic peritonitis : இடுப்புக்குழி அழற்சி : இடுப்புக்குழி வயிற்றுறை அழற்சி.

pelvic peritoneum : இடுப்புக்குழியுறை.