பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/820

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pelvifixation

819

Pendred's syndrome


pelvifixation : இடுப்புறுப்பு நிலைப்படுத்தல் : மிதக்கும் இடுப்பு உறுப்பு ஒன்றை ஒரிடத்தில் நிலைத்துப் பொருத்தும் அறுவை.

pelvimeter : இடுப்புக்குழி மானி; இடுப்புக்குழி அளவி; இடுப்புக் கூட்டுமானி : மகப்பேறு மருத்துவ நோக்கங்களுக்காக, இடுப்புக் குழியின் விட்டத்தை அளவிடுவதற்கான ஒரு கருவி.

pelvimetry : இடுப்புக்குழி அளவீடு; இடுப்புக்குழி அளவை : இடுப்புக்குழியின் பரிமாணங்களை அளவிடுதல்.

pelviotomy : இடுப்புக்கூட்டு அறுவை : 1. பூப்புப்பிணைப்பில் கீறி, இடுப்பு வெளி வழியை பெரிதாக்குதல். 2. சிறுநீரக வட்டிலைக் கீறுதல்.

pelvis : இடை; இடுப்புக்குழி; இடுப்பு வளையம்; இடுப்புக்கூடு; இடுப்பெலும்பு : கிண்ண வடிவிலான இடுப்பெலும்புக்குழிவு; இடுப்புக்கூடு, இடுப்புவளையம்.

pelvispondylitis : முதுகெலும்பின் இடுப்புப் பகுதியழற்சி : முது கெலும்பின் இடுப்புப் பகுதியை பாதிக்கும் கீல்வாதம் போன்ற முதுகெலும்பழற்சி.

pemphigoid : நீர்க்கொப்புளத் தோல் நோய் : நீரழுத்த பெரும் நீர்க்கொப்புளங்களோடு கூடிய தோலின் செந்தடிப்பு நிற மாற்றம் தோன்றுதல்.

pemphigus : நீர்க்கொப்புளம்; தோல் கொப்புளம் : தோலில் ஏற்படும் நீர்க்கொப்புளநோய்.

penbritin : பென்பிரிட்டின் : ஆம்பிசிலின் என்ற மருந்து.

pendelluft : பெண்டெல்ல்ஃப்ட் : மூக்கு, வாய், தொண்டை, குரல்வளை, மூச்சுக்குழாய்கள், மூச்சுநுண்குழல்கள் உள்ளிட்ட மூச்சுப்பாதையில் கண நேர காற்று இயக்கம், வாயுப் பரிமாற்றத்தில் பங்கேற்பில்லை.

Pendred's syndrome : பென்ட்ரெட் நோயியம் : தைராய்டு இயக்குநீர் உருவாவதில் ஏற்படும் தடை காரணமாக தைராயிடு குறைக்கழலையை உண்டாக்கும் பிறவிக்கோளாறு. இத்துடன் காது கேளாமை