பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/821

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pendulous

820

penicillin


அல்லது செவிட்டு ஊமையும் இருக்கலாம்.

pendulous : தொங்கலான; ஊசலான : தொங்கி ஊசலாடுகிற.

pendulous abdomen : தொங்கல் வயிறு : அடிவயிறு முன்பக்கம் தொங்கலாக இருத்தல்.

Penectomy : பெனக்டமி : ஆண்குறித்தண்டு அறுத்து நீக்குதல்.

penem : பெனெம் : நோய் நுண்ணுயிரணுச் சுவரை பாதித்து செயலற்ற நிலையிலிருக்கும் நோய் நுண்ணுயிரை அளிக்கும் பீட்டாலேக்டம் குழுவைச் சேர்ந்த நோயுயிர் எதிர் மருந்து.

penetrance : ஊடுருவு நிலை : ஒரு பொருள் அல்லது பகுதிக்குள் ஏதோ ஒரு பொருள் உள்நுழையும் அளவு. 1. மாற்ற மடைந்த மரபணு அதனை உள்ளடக்கியவற்றுக்குள் குறிப்பிடத்தக்க விளைவினை, ஏற்படுத்தும் அளவு வீதம்.

penetrating ulcer : ஊடுருவு சீழ்ப்புண்; துளைக்கும் சீழ்ப்புண் : உறுப்பெல்லைக்குள் பரவி இரத்த நாளத்தை அரித்திடும் சீழ்ப்புண். இதனால், குருதி வாந்தி அல்லது கருங்கட்டி உண்டாகும்.

penetrating wound : ஊடுருவு காயம்; துளைக்கும் புண் : தோலுக்குள் ஊடுருவி திசுக்களைக் காயப்படுத்தும் கூர்மையான ஆயுதத்தினால் உண் டாகும் ஆழமான காயம்.

penetrometer : ஊடுருவல்மானி : எக்ஸ் கதிர்களின் ஊடுருவும் திறனை அளக்கும் கருவி.

peniicillamine : பெனிசிலாமின் : கன உலோக நச்சூட்டலைக் குணப்படுத்துவதற்குப் பயன்படும் ஒருவகைப் பெனிசிலின் பொருள். வில்சன் நோய், ஈய நச்சு ஆகியவற்றை இது குணப்படுத்துகிறது.

penicillic acid : பெளிசில்லிக் அமிலம் : பெனிசில்லியம் மற்றும் ஆஸ்பெர்ஜில்லஜ் ஆகியவற்றின் பல்வேறு இனங்களின் வளர்மங்களிலிருந்து பெறப்படும் நோயுயிர் எதிர்ப்பொருள்.

penicillin : பென்சிலின் : போஞ்சக்காளானில் முதலில் கண்டுபிடிக் கப்பட்டுச் சில நோய்க் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கப் பயன்படும் மருந்து. கிராம் சாயம் எடுக்கும் பாக்டீரியாக்களினால் உண்டாகும் பல் வேறு நோய்களைக் குணப்படுத்த ஊசி மருந்தாகப் பயன் படுத்தப்படுகிறது. நோயின் கடுமையைப் பொறுத்துப் பல்வேறு அளவுகளில் இது பயன் படுத்தப்படுகிறது. பாக்டீரியாவினால் ஏற்படும் குலையணைச் சவ்வு வீக்கத்திற்கு மிக அதிக