பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/822

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

penicillinase

821

pentobarbitone


அளவு (20,00,000 அலகுகள்) கொடுக்கப்படுகிறது.

penicillinase : பெனிசிலானேஸ் : பெனிசிலினை அழித்திடும் ஒரு செரிமானப் பொருள் (என்சைம்).

penicillin sensitive test : பெனிசிலின் ஒவ்வாமைச் சோதனை : பெனிசிலின் மருந்தினால் ஒவ்வாமை உணர்வு ஏற்படுகிறதா என்று கண்டறிவதற்கான சோதனை.

penicillium : பெனிசிலியம் : தூரிகைபோல் அமைந்த ஒரு வகைப் பூஞ்சக் காளான். இது உணவுப் பொருள்களில் நஞ்சூட்டக்கூடியது.

penicillus : பெனிசில்லஸ் : தூரியின் மயிரிழைகள் போன்று மண்ணீரலில் அமைந்துள்ள தமனி நுண்கிளைகளின் தொகுதி.

penidural : பெனிடுரால் : பென்சாத்தின் பெனிசிலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

penis : ஆண்குறி; மானி : ஆண்களின் கலவி உறுப்பு.

penotrane : பெனோட்ரான் : ஹைட்ராகாஃபென் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

pentaeythritoi tetranitrate : பென்டாஎரித்திரிட்டோல் டெட்ராநைட்ரேட் : நெஞ்சுப்பைக் குருதி நாள விரிவகற்சி மருந்து. இது மைக்கார்டால் என்ற மாத்திரைகளாகக் கிடைக்கிறது.

pentadactyl : ஐவிரல்காரர் : கை கால்கள் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்கள் மட்டுமே உள்ளவர்.

pentagastrin : பென்டாகாஸ்டிரின் : ஒரு செயற்கை இயக்குநீர் (ஹார்மோன்). இது நெஞ்சுப்பைச் செயற்பாட்டுச் சோதனையில் உச்ச அளவு அமிலம் சுரப்பதை ஊக்குவிக்கப் பயன்படுத்தப் படுகிறது. இது ஊசி வழியாகச் செலுத்தப்படுகிறது.

pentamidine : பென்டாமிடின் : செவிப்பறை அழற்சி, "காலா அசார்" என்ற கறுப்புக் காய்ச்சல் போன்ற நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கைக்கூட்டுப் பொருள்.

pentazocine : பென்டாசோசின் : மிதமான வலியை நீக்கப் பயன்படும் மருந்து, மட்டுமீறிய இரத்த அழுத்தத்தில் அல்லது தளர் நெஞ்சுத் துடிப்பில் இது ஊசி வழியாகவும், நரம்பு வழியாகவும், வாய் வழியாகவும் கொடுக்கப்படுகிறது. இது மார்ஃபினை விடச் சிறந்தது.

penthrane : பெந்த்ரான் : மெத்தாக்சிஃபுளுரான்.

pentobarbitone : பென்டாபார் பிட்டோன் : குறுகிய காலம்