பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/824

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

peptidoglycan

823

per contiguum


peptidoglycan : பெப்டிடோக்ஸிகன் : பெரும்பாலான நோய் நுண்ணுயிர்களின் அணுச்சுவரின் முக்கியமான பகுதிக் கூறாக சர்க்கரை (சத்துக்களுடன்) இணைந்த பெப்டைடுகள் அல்லது அமைனோ அமிலங்கள் அடங்கு கூட்டுப்பொருள்.

peptococcus : பெப்டோகாக்கஸ் : மற்ற நோயுயிர்களுடன் இணைந்து செயல்பட்டு தொற்றுகள் உண்டாக்கும் கிராம் சாயமேற்கும் அவ்வளி கோளக்கிருமி.

peptogenic : பெப்டோஜெனிக் : 1. பெப்டோன்ஸ் தயாரிக்கும். 2. சீரணத்துக்கு துணை செய்யும்.

peptones : பெப்டோன்கள் : கரி நீரகைகளின் புத்துருவாக்கச் செரிமான நீரிலுள்ள எளிதில் கரையும் உறையாப் பொருள்கள். புரதச் சீரணத்தின் முதல் கட்டத்தில் ஒர் உள் புரதத்தின் மீது செயற்படும் இரைப்பை நொதி (பெப்சின்) அல்லது நொதி உண்டாக்கும் பொருள்.

peptonuria : பெப்டோன் சிறுநீர் : பெப்டோன் கலந்துள்ள சிறுநீர்.

perception : புலனுணர்வுப் பொருள்; உளவழி அறிதல் : புலனியல் காட்சிப் பொருள்.

peptostreptococcus : பெப்டோஸ்ட்ரெப்டோகாக்கஸ் : சந்தர்ப்பவாத தொற்றுண்டாக்கும் நச்சுயிர்களாக செயல்படும், கிராம் சாயமேற்கும் அல்வளி கோள நச்சுயிரினம்.

percept : புலனுணர்வுப் பொருள்; உணவழி அறிதல் : புலனியல் காட்சிப் பொருள்.

perception : பொறிக்காட்சி; புலனுணர்வு; கண்ணோட்டம்; உணர்ந் தறிதல் : புலனுணர்வு மூலம் ஏற்படும் உள்ளத்தின் புறக்காட்சி, புலனுணர்வு வாயிலாக ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளை வேறுபடுத்திக்காணுதல், அவற்றின் மாறுபட்ட பண்புகளைக் கண்டறிதல் உணர்வறிவு.

perceptivity : உணர்வேற்புமை : உணர்வு பதிப்புகளை ஏற்கும் திறமை.

percolate : ஊடுருவி : 1. தூளான பொருள் ஊடாக நீர்மம் ஒன்றை கசிய அனுமதித்தல், 2. வடிகட்டிய அல்லது ஊடுருவிய நீர்மம்.

percolation : ஊடு பரவுதல்; ஊடுருவித்தல்; பொசிதல்; கசிதல் : நீர்மங்கள் வடிகட்டுவதைக் கடந்து கசிந்து ஊடு பரவுதல்.

per contiguum : பக்கத் தொடல் : தொற்று நோய் நிலை அல்லது புற்றுக்கட்டி ஒரு பகுதியில் இருந்து அடுத்துள்ள அமைப்புக்குப் பரவுவதுபோல் அடுத்தடுத்து தொடருதல்.